Followers

Sunday, December 29, 2013

பிரச்சினையும் தீர்வும் பகுதி 2


ணக்கம் ண்பர்களே!
                    திதி கொடுப்பதைப்பற்றி எழுதி இருந்தேன். புரட்டாசி மற்றும் ஆடி அமாவாசையில் கொடுக்கும் திதி வழக்கமாக ஒன்றாக இருந்தாலும் உங்களின் முன்னோர்கள் இறந்த கிழமை என்ன திதி என்று பார்த்து அன்று திதி செய்யவேண்டும். அப்பொழுது மட்டும் இறந்தவர்களின் ஆத்மாவிற்க்கு அது போய்சேரும் என்று சொல்லுவார்கள். சரி இதனைப்பார்த்து செய்துவிடுங்கள்.

குலதெய்வத்தைப்பற்றி நிறைய எழுதி உள்ளேன் அதனால் குலதெய்வத்தைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை. உங்களின் குலதெய்வத்தை சரியாக பராமரித்து அதற்கு பூஜை செய்து வந்தாலே போதும்.

ஜாதகத்தை கையில் எடுங்கள் அந்த நாள் நல்ல நாளாக இருக்கவேண்டும். அப்படி ஒரு சுபநாளில் எடுத்து அதில் என்ன தான் உள்ளது என்று பாருங்கள். ஒவ்வொரு கிரகத்தையும் பாருங்கள். அந்த கிரகம் எங்கு அமர்ந்துள்ளது என்று பாருங்கள்.

முதலில் ஜாதகத்தில் பிறந்த நாள் மற்றும் கிழமை நேரம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்ப்பதும் அவசியம். இதனை பார்த்துவிட்டு சந்திரனின் நிலை பாருங்கள். வளர்பிறை சந்திரன் அல்லது தேய்பிறை சந்திரனாக இருக்கிறதா என்று பாருங்கள். சந்திரனின் நிலை மிக அவசியம்.

வளர்பிறை சந்திரனாக இருந்தால் நல்லது. பெளர்ணமியாக இருந்தாலும் நல்லது தான் ஆனால் பெளர்ணமி அன்று ரோகினி நட்சத்திரமாக இருக்ககூடாது. அமாவாசையாக இருந்தாலும் நல்லது.

தேய்பிறை சந்திரனாக இருக்ககூடாது வாழ்க்கை படிப்படியாக கீழ் நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்.

சந்திரன் பிரச்சினை என்றால் என்ன செய்வது

பொதுவாக நான் பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன். நாங்கள் பயன்படுத்தும் வித்தை என்பது வேறு அதனைப்பற்றி எந்த ஒரு தகவலும் வெளியில் சொல்லகூடாது என்பது குருவின் கட்டளை அதனால் பொதுவான பரிகாரமாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுத்தி பாருங்கள்.

திங்கள் கிழமை அன்று ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு பால் அபிஷேகம் செய்ய சொல்லுவது பொதுவான பரிகாரம். 

திங்கள்கிழமை அன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள். இரவு நேரம்  8 to 9 ஆக அது இருக்கட்டும்.

பெளர்ணமி கிரிவலம் சென்று வாருங்கள்.

பொதுவாக இது அனைத்தும் வளர்பிறையில் இருந்தால் மிகவும் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: