Followers

Sunday, December 22, 2013

பூர்வ புண்ணியம் 64


வணக்கம் நண்பர்களே!
                    பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்தோம். பூர்வபுண்ணியத்தில் தீயகிரங்கள் அமைந்த ஆட்கள் எல்லாம் என்னிடம் பேசும்பொழுது சார் நாங்கள் அவ்வளவு கெட்டவர்களா என்று கேட்டார்கள்.

உண்மையில் நீங்கள் நல்லவர்கள் தான். எந்த ஜென்மத்திலோ செய்த கர்மவினை பின்தொடர்கிறது அவ்வளவு தானே ஒழிய. வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் நல்லவர்கள். ஒன்றே புரிந்துக்கொள்ளவேண்டும் எந்த இடத்தி்ல் ஒரு தவறு நடந்தாலும் கண்டிப்பாக அந்த தவறை செய்த நபர் தவறு நடந்தபிறகு மனவருத்தம் அடைவார்.

என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று வருந்துவார். ஏன் இப்படி செய்தவர் வருந்துகிறார் என்றால் அவர் செய்த தவறு அவருக்கு சம்பந்தமே இல்லாதமாதிரி தெரிகிறது. அவரின் கர்மா கணக்கில் சேர்த்து வைக்கப்பட்டது வெளிப்பட்டு நடந்து இருக்கிறது என்ற அர்த்தம் மட்டுமே.

ஒரு கொலை நடக்கிறது என்றால் ஒரு வெட்டு இவன் வெட்டினால் உள்ளுக்குள் இருக்கும் கர்மா பத்து வெட்டு சேர்த்து வெட்டுகிறது என்று அர்த்தம். அப்படி ஒரு ஆக்ரோசமாக கர்மா வெளிப்படுகிறது. 

இவர்களுக்கும் நடந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லாதமாதிரி இவர்களின் மனநிலை இருக்கிறது. அதனால் தான் நான் கொலை செய்யவில்லை எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்பார்கள்.

முன்ஜென்மத்து கர்மாவை அனுபவிக்க வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்பொழுது இங்கு யாரும் நல்லவனும் கிடையாது. தீயவனும் கிடையாது. பூர்வபுண்ணியத்தில் தீயகிரகங்கள் இருக்கும்பொழுது அது அதிகமாக வெளிப்படும். அதனை நீங்கள் புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் நடந்துக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

வணக்கம் ஜயா
பூர்வபுண்ணியத்தை பற்றி தாங்கள் ஏழுதிய பதிவு ஏல்லாம் 100% உண்மையாக தான்யிருக்கிறது. மேலும் இவர்கள் புண்ணியகாரியங்கள் செய்ய ஏன்ன செய்ய வேண்டும். ஏந்த தெய்வத்தை வணங்கினால் இவர்களுக்கு மன அமைதிகிடைக்கும்.