வணக்கம் நண்பர்களே!
சூப் பரிகாரம் சூப்பராக வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். பல நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு பேசினார்கள். அதனைப்பற்றி மேலும் சில கருத்துக்கள்.
இந்த மாதிரியான பரிகாரங்கள் எல்லாம் அனைவருக்கும் சரிப்பட்டு வராது. நான் சொல்லுகிறேன் என்றால் மனிதர்களை பார்த்து அதற்கு தகுந்தார்போல் செய்வது உண்டு. நீங்கள் ஒரு தொழில்முறையாக சோதிடராக இருந்தால் இந்த மாதிரி எல்லாம் சொல்லகூடாது. நானும் தொழில்முறை சோதிடர் தான் ஆனால் நான் செய்யும் வேலை அமானுஷ்ய விசங்கள்.
நீங்கள் தொழில்முறையில் இருக்கும்பொழுது உங்களின் நடவடிக்கை எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உள்ளுக்குள் அசைவம் சாப்பிட்டாலும் வெளியில் சைவம் தான் ஆன்மீகத்திற்க்கு ஏற்றது என்று சொல்லவேண்டும். சைவம் தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லவேண்டும். உங்களை அலங்கரிக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே வரும் வாடிக்கையாளர்கள் உங்களை நம்புவார்கள்.
நான் ஒரு வருடம் வேலை செய்யாமல் கூட இருக்கலாம் எப்பொழுதாவது ஒரு வேலை மட்டும் செய்துக்கொண்டு அதில் வரும் பணத்தை உட்கார்ந்து பல வருடங்கள் சாப்பிடலாம். நீங்கள் அப்படி இல்லை தினமும் கூட்டம் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களால் சோதிடதொழில் செய்யமுடியும்.
ஒரு சோதிடராக இருந்தால் இப்படி யாரும் பரிகாரம் சொல்லுவார்களா ?கோவில்கள் அல்லது அவர்களே பூஜை செய்கிறேன் என்று சொல்லி செய்வார்கள். அவர் ஒரு மூட்டை தூக்கும் தொழில் செய்பவர் அவர் கேட்டார் இப்படி சொல்லி செய்ய சொன்னேன். அவரின் நிலையில் நாம் இருந்தால் கோவிலுக்கு செல்லமுடியுமா அவர் எல்லாம் வருடத்திற்க்கு ஒரு முறை கோவிலுக்கு சென்றாலே மிகப்பெரிய விசயமாக தான் இருக்கும். உழைப்பவனுக்கு ஏன் கோவில், பூஜை செய்யவேண்டும்.
தினகூலி பார்ப்பவர்களுக்கு கடவுளும் தேவையில்லை கோவிலும் தேவையில்லை அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு. கடவுள் இருந்தால் என்ன கடவுள் இல்லாமல் இருந்தால் என்ன. இப்பொழுது நாட்டில் நடப்பதை உங்களிடம் சொல்லுகிறேன் தினகூலி மக்களை குறிபார்த்து தான் பிறமதங்கள் தங்களின் வேலையை முதலில் ஆரம்பிக்கிறார்கள். தினகூலி செய்பவன் சிவனை கும்பிட்டு இருப்பான் அவனுக்கு தயிர்சாதம் கொடுத்துருப்பார்கள் பெருமாளை கும்பிட்டு இருப்பான் லட்டு கிடைத்திருக்கும். இயேசுவை கும்பிட்டு இருப்பான் பிரியாணி கிடைத்து இருக்கும்.
தினகூலி செய்பவனுக்கு உடல்வலிமை தேவைப்படும் அவனுக்கு தயிர்சாதத்தை கொடுத்தால் வேலை நடக்குமா பிரியாணி கொடுக்கவேண்டும். நான் காளிக்காம்பாளை தரிசனம் செய்வதற்க்கு பிராட்வே செல்லும்பொழுது அங்கு இருக்கும் தெருக்களில் ஒரத்தில் பல பேர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள அனைவரும் தினகூலிகள் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று தெருஓரத்தில் பிரியாணி தயார்செய்துக்கொண்டிருப்பார் ஒருத்தர். அதன் ஒரத்தில் இயேசு பிராத்தணை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் பிரியாணி கொடுப்பார்கள்.
நமது ஆன்மீகவாதி கண்டிப்பாக அந்த மக்களிடம் ஏன் நீங்கள் இப்படி வாழ்கின்றீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்டு இருக்கமாட்டார்கள் ஆனால் இயேசு அங்கு செல்கிறார். மக்களுக்கு தான் ஆன்மீகவாதி மாறாக ஆன்மீகவாதிக்கு மக்கள் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
ஒரு நேரத்தில் ஒரு ஏழையை நான் காப்பாற்றினேன் அப்படி காப்பாற்றும்பொழுது அதனை என்னுடைய குருநாதரிடம் சென்று சொன்னேன். இப்படிப்பட்ட ஒரு ஏழையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் காப்பாற்றிவிட்டேன் சாமி என்றேன். அவர் சொன்ன வார்த்தை இன்று வரை நான் கடைபிடித்து வருகிறேன். அவர் சொன்ன வார்த்தை இது தான் ஒன்றுமே இல்லாதவனை காப்பாற்ற தான் நம்மள மாதிரி ஆட்களை கடவுள் படைக்கிறார் என்றார். இன்று வரை இந்த வார்த்தை எனக்கு மிகப்பெரிய ஞானவார்த்தை.
மூட்டை தூக்கும் தொழிலாளியின் நிலையில் இருந்து நான் செய்தது சரியான பரிகாரம். அதனை வார்த்தையால் சொல்லி உங்களுக்கு புரியவைக்கமுடியாது. அந்த நிலையில் இருப்பவர்க்கு 100 சதவீதம் சரியான பரிகாரம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் நான் காயத்திரி மந்திரம் தினந்தோறும் சொல்லி வருகிறேன் ஆரம்காலத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை ஆனால் தற்பொழுது ஒரு வாரமாக மந்திரம் சொல்லும் போது மட்டும் நெற்றியில் ஒரு அதித உணர்வு எற்படுகிறதே மேலும் அதித மன ஒற்றுமை எற்படுகிறது இதை பற்றி தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
கார்த்திக்
Post a Comment