வணக்கம் நண்பர்களே!
குரு தசாவில் குரு புத்தியில் அந்தரநாதர்களைப்பற்றி பார்த்து வருகிறோம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
எனக்கு குரு தசாவில் திருமணம் நடைபெறுமா என்ற ஒருவர் கேள்வி வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது நடைபெறுகிறது சுபக்கிரகமான குருவின் தசா. குருவில் மங்கலநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று வைத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது குரு தசாவில் குரு புத்தி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் இரண்டு வருடத்தில் எந்த மாதத்தில் நடைபெறும் என்று சொல்லவேண்டும் அல்லவா. திருமணத்தை காட்டும் இடமான ஏழாம் வீட்டை குறிக்கும் அந்தரங்களில் நடைபெறலாம். அந்த அந்தரம் எப்பொழுது வருகின்றது என்று பார்த்து சொல்லவும்.
குரு புத்தி நடைபெறும்பொழுது புதன் ஏழாவது வீட்டிற்க்கு காரத்துவம் வகிக்கிறார். என்று வைத்துக்கொண்டால் குரு புத்தியின் தொடக்கத்தில் கேள்வி கேட்டுருந்தால் குரு அந்தரம் மற்றும் சனி அந்தரத்தையும் எண்ணிக்கொண்டு ஏழு மாதங்களுக்கு பிறகு வரும் புதனின் அந்தரத்தில் திருமணம் நடைபெறும் என்று சொல்லலாம்.
இப்படி எல்லாம் நீங்கள் சோதிடத்தை கணித்து பார்த்து பலன் சொன்னால் உங்களின் சோதிட திறமையை கண்டு அனைவரும் வியப்பார்கள். நீங்களும் பிரபல சோதிடர்கள் ஆகலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
குரு புத்தி நடைபெறும்பொழுது புதன் ஏழாவது வீட்டிற்க்கு காரத்துவம் வகிக்கிறார். என்று வைத்துக்கொண்டால் குரு புத்தியின் தொடக்கத்தில் கேள்வி கேட்டுருந்தால் குரு அந்தரம் மற்றும் சனி அந்தரத்தையும் எண்ணிக்கொண்டு ஏழு மாதங்களுக்கு பிறகு வரும் புதனின் அந்தரத்தில் திருமணம் நடைபெறும் என்று சொல்லலாம்.
Good Information ThnkQ Sir....
வணக்கம் தங்களின் வருகைக்கு நன்றி
Post a Comment