Followers

Tuesday, December 24, 2013

எத்தனை யோகங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    தற்பொழுது ஒரு நண்பர் தொடர்புக்கொண்டு ஐயா எனக்கு யோகம் இருக்குமா என்று கேட்டார். ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் குறைந்தது ஒரு பத்து யோகமாகவது இருக்கும். எப்படிப்பட்ட அறுந்த ஜாதகத்திற்க்கும் இருக்கும்.

ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் பார்த்தால் ஏகாப்பட்ட யோகத்தை காட்டுவார்கள். நமக்கு இவ்வளவு யோகமாக என்று நினைக்க தோன்றும். உண்மையில் மென்பொருளில் சொல்லியுள்ள யோகங்கள் எல்லாம் நடைபெற்றால் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஜாலியாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் இருக்கின்ற அனைத்து யோகங்களும் செயல்படுவதில்லை. எல்லாம் இருக்கு ஆனால் நமக்கு அது கிடைப்பதற்க்கு நமது லக்கினாதிபதி மற்றும் நடக்கின்ற தசாநாதன் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும். அப்படி ஒத்துழைப்பை அளிக்கும் பட்சத்தில் இருக்கின்ற அனைத்து யோகங்களும் செயல்படும்.

பாதிபேருக்கு லக்கினாதிபதி முக்கால்வாசி அடிவாங்கிவிடுகிறது. அதற்கும் மேல நடக்கின்ற தசாநாதன் ஒழுங்காக செயல்படுவதில்லை. இப்படி எல்லாம் இருப்பதால் தான் யோகங்கள் செயல்படுவதில்லை. கோச்சாரபலன்களே பலனை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது யோகங்கள் எப்படி செயல்படும். அப்படியே யோகங்கள் நடைபெற்றால் எப்பொழுதாவது ஒரு முறை நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: