Followers

Thursday, December 19, 2013

விளம்பரமான ஆன்மீகம் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீகவாதிகளின் சுயநலம் என்பது இப்பொழுது அதிகமாகவே இருக்கின்றது. நமக்கு என்று ஒரு கூட்டத்தை கூட்டவேண்டும். நாம் சொல்லுவது போல அனைவரும் செயல்படவேண்டும் என்று அரசியல் கணக்காக செயல்பட ஆரம்பித்த காரணத்தால் மட்டுமே இன்று இந்த மதத்தை விட்டு விட்டு வேறு மதத்திற்க்கு மக்கள் செல்ல காரணமாக ஆகின்றது. 

எப்பொழுதும் மதம் சொல்லும் ஒரே விசயம் உன் தெரிந்துக்கொண்டால் போதும் என்பது மட்டுமே. உன்னை தெரிந்துக்கொண்டால் அடுத்தவனை நீ தேடி போகவேண்டியதில்லை. ஒரு மனிதன் மிகப்பெரிய மகான் ஆகின்றார் என்றால் நம்மாலும் ஆகமுடியும் என்று நம்பினால் போதும். யார் பின்னாடியும் செல்லவேண்டியதில்லை.

உடலை வருத்தி ஆன்மீகம் வரவேண்டியதில்லை. மனதை வருத்தி ஆன்மீகம் வந்தால் போதுமான ஒன்று. மனதை வருத்திவிட்டால் அனைத்தும் புரிந்துவிடும். நான் ஒரு கோவிலுக்கு செல்லுவது கூட எனது சக்தியின் உணர்வதற்க்கு ஒரு வாய்ப்பை அந்த இடம் தரும் என்பதால் போவேன். அதுவும் அங்கு சக்தி இருந்தால் மட்டுமே நான் செல்வது உண்டு அப்படி சக்தி இல்லை என்றால் சும்மா பார்த்துவிட்டு வந்துவிடுவேன். 

ஒரு மனிதனை தன்பக்கம் இழுக்கவேண்டும் என்றால் சும்மா ஏதாவது எங்கையாவது இருக்கின்றது வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம். அங்கு சென்று உங்களுக்கு ஒன்றும் நடைபெறபோவதில்லை.

இப்படி பல பேர்கள் மக்களை ஏமாற்றி தன்பிழைப்பிற்க்காக இதனை செய்து இன்று மக்கள் வெளி மதங்களை நாடி செல்லதொடங்கிவிட்டனர். ஆன்மீகத்திற்க்கு விளம்பரம் செய்யவேண்டிய தவறு இல்லை அந்த விளம்பரம் உண்மையானதாக இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: