Followers

Thursday, December 19, 2013

ஆன்மீக அனுபவங்கள் 141


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக அனுபவங்களில் மிகவும் முக்கியமான ஒன்றைப்பற்றி பார்க்கலாம். சேட்டு கடைகளில் தண்ணீர் கிளாஸ் வைத்து அதில் எலுமிச்சை பழம் போட்டு வைத்திருப்பார்கள் நீங்கள் பார்த்து இருக்கலாம். இது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா

துர்சக்திகள் வராமல் இருப்பதற்க்கு அப்படி செய்வார்கள். உண்மையில் அது அப்படி செய்யகூடாது சொம்பு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைபழத்தை போட்டு வைக்கவேண்டும். இது தான் சாஸ்திரமுறை. இதனை வீடுகளில் மற்றும் கடைகளில் இந்த முறையை பின்பற்றலாம். இதில் என்ன அறிவியல் இருக்கின்றது என்பதைப்பற்றி விளக்கமுடியாது ஆனால் இதில் பல உண்மைகள் இருக்கின்றது.

உங்களின் வீட்டில் ஏதாவது ஒரு மரணம் நடந்தால் அந்த மரணம் நடந்தபிறகு அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும். அதற்கு காரணம் அந்த ஆத்மா அந்த வீட்டை விட்டு செல்லவில்லை என்று அர்த்தம்.

இரவில் தீயசக்திகளின் ஆதிக்கம் அதிகம் என்பதால் வீட்டில் சொம்பு வைத்து அதில் நீரை ஊற்றி அதில் எலுமிச்சை பழத்தை போட்டு வைப்பார்கள். இது எல்லாம் கிராமபுறங்களில் இன்றும் பின்பற்றி வருகிறார்கள். விடிந்தது அதனை எடுத்து வெளியில் கொண்டு சென்று ஊற்றிவிடுவார்கள்.

உங்களின் வீட்டில் யாராது மரணம் அடைவது போல் இருந்தால் அந்த நேரத்தில் அவருக்கு அருகில் சொம்பு நீர் வைத்து அதில் எலுமிச்சை பழத்தை போட்டு வையுங்கள். அவர் உயிர் பிரிவதால் அந்த ஆத்மாவால் நமக்கு ஏற்படும் பிரச்சினை இருக்காது. அந்த ஆத்மாவும் செல்லவேண்டிய இடத்திற்க்கு செல்லும்.

ஒவ்வொரு வீட்டிலும் தினமும் இந்த முறையை கூட பின்பற்றி வருவது நல்லது. தீயசக்திகளின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கலாம். இது நூறு சதவீதம் உண்மை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

ATOMYOGI said...

வணக்கம் ஐயா!
1.சொம்பில் ஊற்றச் சொன்னீர்கள். அது செம்பு சொம்பா அல்லது எந்த சொம்பாக வேண்டுமானலும் இருக்கலாமா?
2.காலையில் தினமும் தண்ணீரை கீழே ஊற்ற வேண்டுமா? அல்லது செடிகளுக்கு ஊற்றலாமா(வீட்டில் வளர்க்கும் துளசி செடிக்கு)?
3.அந்த எலுமிச்சை பழத்தினை என்ன செய்ய வேன்டும்? வீசி விட வேண்டுமா அல்லது சமையலுக்கு பயன்ப்டுத்தலாமா?
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.