வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு கிரகம் பனிரெண்டாவது வீட்டில் நின்று தசா நடைபெற்றால் எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்
குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுத தசா நடைபெற்றால்
விரைய வீடு என்பதால் சுபக்கிரகம் அமர்ந்து தசா நடத்துவதால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சொல்லவும். மற்றப்படி அடிக்கடி நீங்கள் திருமண நிகழ்ச்சிக்கு மொய் வைப்பதால் அதிக செலவு ஏற்படும் என்று சொல்லலாம். நல்ல உறக்கம் ஏற்படும். தூக்கத்தில் நல்ல கனவுகள் தோன்றும்.
பனிரெண்டாவது வீட்டில் இருந்து குரு ஐந்தாவது பார்வையாக சுகஸ்தானத்தை பார்ப்பதால் சுகமான வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லலாம். புதிய வீடு கட்டுவதற்க்கு உங்களின் பணம் செலவாகும்.
புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வாகனங்கள் நன்றாக இருக்கும். ஒரு சிலர் கோவிலுக்கு வாகனங்கள் வாங்கிக்கொடுப்பார்கள். சாமியை வைத்து கொண்டு செல்ல வாகனங்கள் வாங்குவார்கள்.
பனிரெண்டாவது வீட்டில் இருந்து குரு கிரகம் ஒன்பதாவது பார்வையில் எட்டாவது வீட்டை பார்ப்பதால் முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்கும். யாராவது உங்களின் வீட்டில் வைத்து பராமரித்து வந்திருப்பீர்கள் அவர்களின் சொத்துக்கள் கூட ஒரு சிலருக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
குரு கிரகம் கெட்டால் மேலே சொன்ன பலன்களுக்கு எதிராக நடைபெறும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment