வணக்கம் நண்பர்களே!
நாளை 16-12-2013 மார்கழி மாதம் பிறக்கின்றது. கடவுளுக்கு பிடித்திருக்கோ இல்லையோ இந்த மாதம் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்து மார்கழி பிடித்ததின் காரணம். எனக்கு சினிமா பாடல் என்றால் மிகவும் விருப்பம்.
எங்களின் ஊரை சுற்றி முருகனுக்கு மற்றும் ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் எல்லாம் அதிகாலை வேளையில் எழுந்து குளித்துவிட்டு அவர்கள் தங்கும் இடத்தில் ஸ்பீக்கர் வழியாக பாடல்களை போட்டுவிடுவார்கள். நானும் அதனை கேட்டுக்கொண்டு இருப்பேன். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அப்பொழுது எல்லாம் எங்களின் ஊரில் மாலை போடுபவர்கள் அனைவரும் ஒன்றாக கோவிலில் தான் தங்குவார்கள்.
இப்பொழுது அந்த பழக்கத்தை எல்லாம் எங்கள் கிராமத்தில் மாற்றிவிட்டார்கள். இப்பொழுது மாலை போடுபவர்கள் அவர்களின் பெட்ரூமில் இருந்து எழுவதே விடியற்காலை எட்டுமணிக்கு தான். என்ன செய்வது பேஷ்புக் காலம் அல்லவா.
மார்கழி என்றாலே விடியற்காலை எழுவது பனி பொழியும் நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு அந்த தெய்வீக பாடலை கேட்கும்பொழுது அடடா நாத்திகன் கூட ஆன்மீகவாதியாக மாறும் நேரம் அது.
இதனை நாளை முதல் நீங்கள் அனுபவித்து பாருங்கள். நீங்கள் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு ஒரு நல்ல காலம் நாளை முதல் பிறக்கிறது. ஒரு மாதகாலத்தில் நீங்கள் ஆன்மீகத்தில் ஜொலிக்கபோகிறீர்கள்.
இசையால் கடவுளை அடைவது எளிது என்று கடவுள் எனக்கு சொல்லாமல் சொன்ன மாதம் மார்கழி மாதம் அப்பேர்ப்பட்ட மாதத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். நாளை விடியற்காலையில் எழுந்துவிடுவது நல்லது.
இசையால் கடவுளை அடைவது எளிது என்று கடவுள் எனக்கு சொல்லாமல் சொன்ன மாதம் மார்கழி மாதம் அப்பேர்ப்பட்ட மாதத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். நாளை விடியற்காலையில் எழுந்துவிடுவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment