Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 44


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனிபுத்தியை பார்த்து வருகிறோம். குரு கிரகத்திற்க்கு சனிகிரகம் ஏழில் நின்று புத்தியை நடத்தினால் என்ன பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

சனிக்கிரகம் ஏழில் நின்றால் அதனை குருகிரகம் தன் ஏழாவது பார்வையால் பார்ப்பார். குருவின் பார்வைபடுவதால் சனிக்கிரகம் ஒரளவு நல்லதை செய்வார். திருமணம் செய்யாமல் இருந்தால் திருமணம் செய்யலாம். 

ஏழாவது வீட்டில் இருந்து சனிக்கிரகம் தன்னுடைய மூன்றாவது பார்வையால் ஒன்பதாவது வீட்டை பார்க்கிறார். சமுதாயத்தில் நல்ல பேர் எடுக்கவைப்பார். மேலை நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு வரும்.

ஏழாவது வீட்டில் இருந்து சனி பகவான் நேரிடை பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார் இந்த காலத்தில் வாழ்க்கையில் வளர்ச்சி குறைவாக இருக்கும். மெதுவாக செல்லுவது போல் சென்றுக்கொண்டு இருக்கும்.

ஏழாவது வீட்டில் இருந்து சனி பகவான் பத்தாவது பார்வையில் நான்காவது வீட்டை பார்ப்பார். சுகஸ்தானம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல உறவு ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: