Followers

Sunday, December 15, 2013

குரு தசா பலன்கள் பகுதி 20


வணக்கம் நண்பர்களே!
                    குரு கிரகம் ஏழாவது வீட்டில் நின்று குருவின் தசா நடைபெற்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

குரு கிரகம் நல்ல நிலையில் இருந்து தசா நடைபெறும்பொழுது களத்திர வீட்டில் நிற்பதால் திருமண யோகம் ஏற்படும். திருமணத்தை விரைவில் நடத்தி வைப்பார். உங்களுக்கு திருமணம் முடிந்து இருந்தால் உங்களின் துணைவர் வழியில் மிகப்பெரிய உதவி உங்களுக்கு கிடைக்கும்.

அடிக்கடி பயணங்கள் ஏற்படும் அதுவும் கோவிலுக்கு செல்வது போல் இருக்கும். உங்களின் எதிராளியின் பணம் கூட உங்களின் கைக்கு வரும். நீங்கள் கூட்டுத்தொழில் செய்து வந்தால் உங்களின் வியாபாரம் நன்றாக செல்லும் உங்களின் தொழில் கூட்டாளிகள் உங்களிடம் நல்லவிதமாக நடந்துக்கொள்வார்கள்.

குரு கிரகம் ஏழில் அமர்ந்து ஐந்தாவது பார்வையில் பதினோராவது வீட்டை பார்ப்பதால் உங்களின் லாபம் உயரும் என்று சொல்லலாம். உங்களின் வருமானம் நன்றாக இருக்கும். நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் வருமானம் அதிகமாக வரும். உங்களின் நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.

குரு கிரகம் ஒன்பதாவது பார்வையாக மூன்றாவது வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு நல்ல தைரியம் பிறக்கும். கமிஷன் தொழில் வழியாக பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவிகரம் நீட்டுவார்கள். அவர்கள் அன்போடு உங்களை உபசரிப்பார்கள்.

குரு கிரகம் கெட்டு தசா நடைபெற்றால் மேலே சொன்ன பலன்களுக்கு எதிராக நடைபெறும். அதே நேரத்தில் உங்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: