வணக்கம் நண்பர்களே !
குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒரு பொதுகருத்தை சொல்லுகிறேன். குரு தசா யாருக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதோ அவர்களுக்கு நட்பு வட்டம் எல்லாம் குருவோடு தான் அதிகபட்சமாக இருக்கும்.
ஆன்மீகவாதிகள் தொடர்பு எல்லாம் குரு தசாவில் தான் அதிகமாக இருக்கும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒருவருக்கு குரு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்தால் அவர்கள் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது எல்லாம் ஆன்மீகவாதியாக பார்த்து திருமணம் செய்யது வைக்கவேண்டும். திருமணம் நடப்பதும் அப்படி தான் நடைபெறும்.
கேது தசா நடைபெற்றால் ஆன்மீகவாதி தொடர்பு ஏற்படும் என்பது சொல்லமுடியாது. ஏன் என்றால் அனைத்தையும் படித்து முடித்துவிட்டு ஞானத்தை தேடி சென்றுவிடுவார்கள் அங்கு பயிற்சி என்பது இருக்காது. தனிமையான நிலை மட்டுமே இருக்கும்.
குரு தசா நடைபெற்றால் பல ஆன்மீகவாதிகள் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.அதேப்போல் குரு தசா வீட்டில் கணவருக்கு நடைபெற்றால் மனைவிக்கு வேறு தசா நடைபெறும்பொழுது இருவருக்கும் ஒற்றுமை ஏற்படாது. கணவன் சாமியை பற்றி பேசிக்கொண்டிருப்பார் மனைவி வேறு ஏதாவது ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டு இருப்பார். இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்படும்.
குரு தசா நடப்பவர்கள் ஜாதககதம்பத்தை படித்துக்கொண்டு இருப்பார். அவர் மனைவி இவருக்கு வேலையோ இல்லை. நாள் முழுவதும் இதனையே படித்துக்கொண்டிருக்கிறீர்கள் வேறு வேலை இல்லையா என்று கேட்பார். உண்மையிலே நண்பர்களே பல இடங்களில் இந்த மாதிரி நடந்திருக்கிறது.
மணப்பொருத்தம் என்பது குரு தசாவுக்கு குருதசாவுக்கு ஏகாஒற்றுமை உண்டு. நடப்பில் இப்படி செய்யகூடாது என்று சொல்லுவார்கள். உண்மையில் குரு தசாவையும் குரு தசாவையும் சேர்த்துவிட்டால் இல்லறம் என்பது தெய்வீகமாக மாறும். அற்புதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள்.
அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன். காதல் திருமணம் செய்தவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்படி அவர்களின் ஜாதகத்தை பார்க்கும்பொழுது இருவருக்கும் ஒரே மாதிரியான தசா நடைபெறும். அவர்கள் அருமையாக வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள். சோதிட விதியில் நாம் தவறு என்று சொல்லுவோம். அனுபவத்தில் அருமையாக இருக்கிறது. அதாவது இருவருக்கும் குரு தசா வந்தால் அவர்களை பங்குவப்படுத்திவிடுகிறது. வேறு தசாவிற்க்கு நான் சொல்லவில்லை குரு தசா அப்படி ஒரு பக்குவத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment