குரு தசாவில் சனி புத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு கிரகம் லக்கினத்தில் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதே நேரத்தில் லக்கினத்தில் புத்தி நாதனான சனியும் சேர்ந்து இருந்தால் தசாநாதனும் கெடுவார் மற்றும் புத்திநாதன் லக்கினத்தில் இருந்து புத்தியை நடத்துவதால் உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சனியின் பார்வை மூன்றாவது பார்வையால் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் அக்கம்பக்கம் பிரச்சினை. காதில் பிரச்சினை மற்றும் அடிக்கடி ஏற்படும் பயணங்களில் பிரச்சினை ஏற்படுத்திவிடுவார்.
சனியின் நேரடி பார்வையான ஏழாவது வீட்டைப்பார்ப்பதால் துணைவர் வழியாக பிரச்சினையை சந்திக்க நேரிடும். உங்களோடு தொடர்பை வைத்திருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.
சனியின் பத்தாவது பார்வையால் தொழில் வீட்டைப்பார்ப்பதால் தொழில் செய்வதில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். செய்கின்ற வேலையில் பிரச்சினை ஏற்படும். கர்மா ஸ்தானம் என்பதால் தந்தை அல்லது தாய்க்கு கர்மம் செய்யவேண்டிவரும்.
இரண்டில் இருந்து சனி மூன்றாவது பார்வையாக நான்காவது வீட்டை பார்க்கும் சுகஸ்தானம் கெடும். அம்மாவிற்க்கு பிரச்சினை ஏற்படும். உடல் நிலை பாதிப்பை உருவாக்குவார்.
இரண்டாவது வீட்டில் இருந்து சனியின் நேரடியான பார்வையால் எட்டாவது வீட்டை பார்ப்பதால் ஆயுள் ஸ்தானம் அதிகரிக்கும் என்று சொல்லலாம். அதே நேரத்தில் சிறு சிறு விபத்துக்களும் நடைபெறும். ஒரு சிலருக்கு அவமானம் ஏற்படும்.
இரண்டில் இருந்து சனி பத்தாவது பார்வையாக பதினோராவது வீடான லாபஸ்தானத்தை பார்ப்பதால் லாபம் குறைவாக இருக்கும். சனியின் பார்வை படும் இடம் பிரச்சினையை சந்திக்கும் என்பதால் இப்படிப்பட்ட பலனை தரும் என்று சொல்லவும்.
தொடர்ந்து பார்க்கலாம்...
தொடர்ந்து பார்க்கலாம்...
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment