Followers

Wednesday, December 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 56


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் ஒரு பொதுகருத்தை சொல்லவேண்டும். இது ஏற்கனவே சொல்லப்பட்டாலும் மறுபடியும் சொல்லுகிறேன். உங்களின் நலனுக்காக  மறுபதிவாகவே இருக்கட்டும்.

குரு தசா வந்தாலே உடல் கனத்துவிடுகிறது. பல நண்பர்கள் என்னை பார்க்கவருகிறார்கள் அவர்களுக்கு குரு தசா நடைபெறுகிறது அவர்களிடம் இதனை நான் நேரடியாக சொல்லமுடிவதில்லை. எதாவது நினைப்பார்கள் என்று சொல்லுவதில்லை. பதிவு வழியாக சொல்லிக்கொள்கிறேன்.

ஆண்களுக்கும் சொல்லுகிறேன். பெண்களுக்கும் சொல்லுகிறேன் குரு தசா வந்தால் உடலை நன்றாக கவனிக்கவேண்டும். அதிகமான சாப்பாட்டை சாப்பிடாதீர்கள். அனைவரும் உடல் பெருத்து தொப்பையோடு காணப்படுகிறீர்கள். குரு தசா அவ்வாறு செய்வதால் நீங்கள் அப்படி இருக்கின்றீர்கள். உணவில் கவனம் தேவை.

குரு தசா சூரிய புத்தியில் இதய கோளாறு ஏற்பட்டு போனாலும் போய்சேர்ந்துவிடுவீரகள். குரு தசாவும் கொல்லக்கூடிய தசா தான் என்பதை மனதில் முதலில் வையுங்கள்.தினமும் காலையில் எழுந்து நல்ல வாக்கிங் செல்லுங்கள். உடற்பயிற்சி தேவை.  நான் 45 நிமிடத்திற்க்கு ஒரு முறையாவது எழுந்து மாடிப்படி ஏறிவிட்டு தான் வந்து அமருவேன். ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்துவிடகூடாது.என்ன செய்வீர்களா 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Kisshor kumar said...

எனக்கு குரு தசாவில் உடல் ஒல்லியாகவே இருந்தது. கடந்த வருடம் சனி தசா ஆரம்பித்த உடன் உடலில் சற்று சதை போட்டுள்ளது. இது எதனால்? நான் பிறக்கும் போது ராகு தசா நடைப்பெற்றது. எனது நக்ஷத்திரம் திருவாதிரை ஆகும்.