வணக்கம் நண்பர்களே!
இந்து மதத்தில் உள்ளவர்கள் ஏன் மாற்று மதத்தை தேடிச்செல்லுகிறார்கள் என்று எனது நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியுள்ளார்.
இந்து மதத்தைப்பற்றி சொல்லிதருவதற்க்கு சரியான ஆட்கள் இந்து மதத்தில் இல்லை என்பதால் மாற்று மதத்தை தேடிச்செல்லுகிறார்கள். மக்களை கெடுத்தது ஆன்மீகவாதிகள் தானே தவிர மக்கள் கிடையாது என்றேன்.
மாற்று மதமாக இருந்தால் ஒரு இடத்தில் கூடி அவர்களின் வழிப்பாட்டை சொல்லிக்கொடுக்கிறார்கள். வழிப்பாட்டை நடத்திக்கொள்கின்றனர். நம்ம மதத்தில் இல்லாத ஒரு இடத்தை சொல்லி அங்கு சிவன் வருகிறார் பெருமாள் வருகிறார் என்று சொல்லிவிடுவது. மக்களும் அதனை நம்பி சென்று ஒன்றும் நடைபெறவில்லை என்றவுடன் கடுப்பாகி திரும்பிவிடுகிறார்கள்.
இதனை மாற்று மதத்தினர் தங்களின் பக்கம் எளிதில் திருப்பிவிடுகிறார்கள். மக்களுக்கு எங்கு நன்மை நடைபெறுகிறதோ அங்கு சென்றுவிடுவார்கள். நம்ம ஆட்கள் காசு பார்க்க ஆன்மீகத்தில் இல்லாத ஒன்றைச்சொல்லிவிடுகிறார்கள். எவ்வளவு நாள் தான் மனிதனை முட்டாளாக்கமுடியும். விழித்துக்கொண்டவுடனே ஒடிபோய்விடுவான்.
நமது மதத்தில் ஆன்மீகம் என்பது ஒரு விளம்பரம்போல் தான் செயல்படுத்துகிறார்கள். உண்மையான ஆன்மீகம் தெரியவில்லை. டிவியில் அல்லது இண்டர்நெட்டில் யாராது பிழைப்புக்கு ஏதாவது சொல்லிவிடுவார்கள். மக்களும் அதனை நம்பி போவார்கள். போனால் அவர்களின் குறையை நிவர்த்திச்செய்து கொடுக்கவேண்டும்.அதனையும் நடத்திக்கொடுப்பதில்லை.
ஒன்றும் இல்லாதை சொல்லி எவ்வளவு நாட்கள் காலம் தாழ்த்தமுடியும். மக்களுக்கு போகபோக தான் இது புரிகிறது. கடைசியில் இது எதுவும் வேண்டாம் என்று விட்டு விட்டு சென்றுவிடுகிறார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment