Followers

Tuesday, December 17, 2013

நண்பர்களின் கவனத்திற்க்கு


ணக்கம் நண்பர்களே!
                    நம்முடைய நண்பர்கள் அனைவரும் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். எனக்கு போன் செய்து சார் எனக்கு இந்த தசா நடைபெறுகிறது. எனக்கு சுயபுத்தி நடந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து வரும் புததிகள் எல்லாம் நன்றாக இருக்கும் அல்லவா என்று கேட்பார்கள்.

நானும் அவர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அடுத்த வரும் புத்தியோடு அதற்கு அடுத்த வரும் புத்தியில் இருந்து தான் உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்று சொல்லுவேன். உடனே என்ன சார் இப்படி சொல்லுகிறீர்கள் எனக்கும் சோதிடம் தெரியும் சார். இந்த கிரகம் இதில் நிற்கிறது. அந்த கிரகம் அந்த காலில் நிற்கிறது என்று தெரிந்த சோதிட அறிவை சொல்லுவார்கள். எனக்கு நல்லது நடக்கபோகிறது என்பார்கள். 

ஒருவருக்கு நல்லது நடக்கபோகிறது என்றால் நான் என்ன தடுக்கவா போகிறேன். எனக்கு தெரிந்த சோதிட அறிவை வைத்து சொல்லுகிறேன். இன்றைய காலகட்டத்தில் சோதிட அறிவு இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலை ஏற்ப்பட்டுவிட்டது.

உங்களுக்கு சோதிடம் தெரிந்தால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் எனக்கு அனுப்பி சோதிடப்பலனை கேட்கவேண்டும். அடுத்தது நமது நண்பர்கள் கேட்கும் கேள்வி சார் நீங்கள் முறையாக சோதிடத்தை படித்தவரா என்பது போல் தான் இருக்கும். எனக்கு சிரிப்பு தான் வரும். நான் பாடம் படிப்பதற்க்கே பள்ளிக்கூடம் சென்றதில்லை இதில் சோதிடம் படிக்கவா பல்கலைகழகம் செல்லபோகிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளும் ஒரு உண்மை என்ன என்றால் சோதிடத்தை ஒரு சதவீதம் எடுத்துக்கொள்ளுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. சோதிடத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை போய்விடும். வாழ்க்கையை தொலைத்துவிடுவீர்கள். 

சோதிடத்தை நம்பவேண்டாம் என்று சொல்லவில்லை அதனை வைத்துக்கொண்டு நமது வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் தான் நமது மூளை செயல்படவேண்டும். ஜாதகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால் போதாது. அதில் இருந்து விடுபடவழி என்ன என்று பார்த்துக்கொண்டு வந்துவிடவேண்டும்.

நீங்கள் நினைக்கலாம் என்னடா இவர் சோதிடராக இருந்து இப்படி சொல்லுகிறாரே என்று நினைக்கதோன்றும். நான் சோதிடத்தை பயன்படுத்துகிறேன் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ஒரு அளவோடு அதனை பயன்படுத்திக்கொள்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: