வணக்கம் நண்பர்களே!
குரு தசாவை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே குரு தசாவிற்க்கு பரிகாரம் என்ன என்று கேட்கிறார்கள் ஒரு சில நண்பர்கள் அவர்களின் கேள்விக்கு பதிலை பல பழைய பதிவில் சொல்லிருந்தாலும் புதியதாகவும் சொல்லிவிடலாம் என்று இப்பதிவு.
மேன்மக்களை காட்டும் கிரகம் குரு கிரகம் என்பார்கள். மூத்தோர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்களை காட்டும் கிரகம் என்பதால் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்க்கு நிதி உதவி செய்யலாம். அன்னதானம் செய்யலாம். படிப்புக்கு உதவி செய்வது நல்ல பரிகாரம். உங்களின் ஊரில் உள்ள கோவிலுக்கு பூஜை செய்வதற்க்கு உங்களால் முடிந்த பணஉதவியை செய்யலாம்.
ஹோமங்கள் நடத்திக்கொள்ளலாம். ஹோமங்கள் நடத்துவதற்க்கு உங்களிடம் பணம் இல்லை என்றால் கோவில்கள் மற்றும் திருவிழாவில் எங்கு ஹோமங்கள் நடைபெறுகிறதோ அங்கு சென்று நீங்கள் அமர்ந்துக்கொள்ளுங்கள்.
அக்னியின் அருகில் அமர்ந்துக்கொள்வது நல்லது. நான் பல ஹோமங்களை நடத்தி இருந்தாலும் ஹோமங்கள் நடத்துவதற்க்கு முன்பு பல ஹோமங்களில் பங்கு பெற்று இருக்கிறேன். நீங்களும் ஹோமங்களில் பங்குக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment