வணக்கம் நண்பர்களே!
அம்மனிடம் மற்றும் மற்ற தெய்வங்களிடம் ஆயுதம் வைத்திருப்பதை பார்த்து இருககலாம். இது எல்லாம் அந்தந்த நாட்டில் மக்கள் பயன்படுத்தப்படும் ஆயுத்தை வைத்திருப்பார்கள். உண்மையில் எந்த கடவுளும் இந்த ஆயுதத்தை எடுத்துவந்து உங்களை வெட்டபோவது கிடையாது. அனைததும் சூட்சமங்களாக தான் இயங்கும்.
ஒரு தெய்வம் உங்களை தாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தெய்வம் உங்களை சமயம் பார்த்து ஒரு காற்று போல் செயல்பட்டு உங்களை தாக்கும். பைக்கில் சென்று கொண்டிருப்பீர்கள் கன நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை கீழே விழுந்துவிட்டேன் என்பீர்கள். இப்படி தான் உங்களின் சுயசிந்தனைக்கு கிடைக்காத மாதிரி தெரியும்.
ஒரு சதவீதம் மட்டுமே நம்மிடம் இருக்கும் மீதி எல்லாம் அதுவாகவே இயங்கும். அது இயங்கும் விதத்தை கட்டுபடுத்திவிடுவது கடவுளின் வேலையாக இருக்கும். அதனை கட்டுபடுத்திவிட்டால் நீங்கள் காலி. மற்றபடி கடவுள் ஆயுதம் எடுத்துவந்து எல்லாம் உங்களை தாக்கமாட்டார்.
கடவுளுக்கு ஆயுதம் கொடுத்தது எல்லாம் நமது வழகத்திற்க்கு தகுந்தபடி கொடுத்து வைத்திருக்கிறார்கள். நாம் அதனை பார்த்து பயந்து ஒழுங்காக வாழ்வோம் என்று அப்படிவைத்திருக்கிறார்கள். கடவுளும் நமது பாவத்திற்க்கு தகுந்தார்போல் தண்டனையை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.
ஒருபோதும் கடவுள் ஆயுதத்தை எடுப்பதில்லை. அவர் எடுத்தால் உலகத்தில் ஆளை இருக்கமாட்டான். என்ன கடவுள் நின்று கொல்லுகிறார். இந்த ஜென்மத்தில் கிடைக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் கிடைக்கலாம் ஆனால் கண்டிப்பாக கிடைக்கும்.
ஒருபோதும் கடவுள் ஆயுதத்தை எடுப்பதில்லை. அவர் எடுத்தால் உலகத்தில் ஆளை இருக்கமாட்டான். என்ன கடவுள் நின்று கொல்லுகிறார். இந்த ஜென்மத்தில் கிடைக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் கிடைக்கலாம் ஆனால் கண்டிப்பாக கிடைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment