Followers

Friday, March 24, 2017

நல்ல முன்னேற்றம்


வணக்கம்!
          ஒருத்தரை வாழவிடாமல் செய்வதற்க்கு என்ன வழி என்பதை தான் எல்லா சாதாரண மனிதனும் நினைப்பான். அதனை தவிர்த்து பிறரும் வாழவேண்டும் என்று நினைப்பவன் குறைவாக தான் இருப்பார்கள்.

இந்த உலகம் அப்படிப்பட்ட உலகமாக இருக்கின்றது. அண்ணன் தம்பியாக இருந்தால் கூட அவர்களுக்குள்ளும் பொறாமை இருக்கின்றது. அவர்களே ஒற்றுமையாக வாழ விரும்பமாட்டேன் என்கிறார்கள்.

உங்களுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது என்றால் அது அக்கம் பக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் எதிர்ப்பு அதிகமாக இருக்கின்றது என்றால் முடிந்தளவு நீங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வது நல்லது.

உங்களின் வீட்டில் அக்கம்பக்கம் உள்ளவர்களோடு தேவை ஏற்பட்டால் மட்டுமே பேசவேண்டும். தேவையில்லாமல் பேசகூடாது. உங்களின் வளர்ச்சிக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பு இருந்தால் உங்களின் வளர்ச்சி பாதிக்கும்.

எதிர்ப்பு இருக்கும் இடத்தில் நீங்கள் அதிக பந்தாவையும் காண்பிக்க வேண்டாம். அதே போல் அடுத்தவர்களின் வாய் வார்த்தையிலும் நீங்கள் வாங்கிகட்டிக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

பெரிய பணக்காரர்களின் தாரகமந்திரம் இது தான். எதனையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பார்கள். அவர் அவர்களின் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பார்கள். இது எதனை காட்டுகிறது என்றால் அடுத்தவனிடம் எதனையும் வாங்கவில்லை அதனால் அவர்கள் மேலும் மேலும் முன்னேற்றம் காண்கிறார்கள். முடிந்தால் நீங்களும் இதனை கடைபிடித்து வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு