Followers

Wednesday, May 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
           அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

பல பேர்கள் நம்மிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களுக்கு தகுந்தமாதிரி ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து அந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். ஒரு முறை சென்று வந்தாலும் போதுமானது என்று சொல்லிருக்கிறோம்.

பரிகாரம் என்றால் அந்த கோவிலுக்கு சென்று வருவது மட்டுமே பரிகாரமாக அமையும் என்பதால் இதனை பலரிடம் வலியுறுத்தி சொல்லிருக்கிறேன். நாம் பலன் சொல்லும் நேரத்தில் கேட்டுக்கொண்டு அதன் பிறகு அந்த கோவிலுக்கு சென்று வருவது கிடையாது.

பல வருடங்கள் சென்ற பிறகு கூட நம்மை நாடி மறுபடியும் வரும்பொழுது அந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறீர்களா என்று கேட்டால் அவர்கள் செல்லவில்லை என்று சொல்லுவார்கள். அவர்கள் சொன்ன பிரச்சினை தற்பொழுதும் இருக்கின்றது என்பார்கள்.

உங்களின் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு தான் கோவிலுக்கு சென்று வரச்சொன்னேன் என்று நான் சொல்லுவது உண்டு. எப்படியும் இந்த முறை சென்று வருகிறேன் என்று சொல்லுவார்கள். எந்த பரிகாரமாக இருந்தாலும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் அதன் பலன் நன்றாக இருக்கும் என்று எண்ணி தான் இதனை சொல்லுவது உண்டு. அனைவரும் நாம் சொல்லக்கூடிய கோவிலுக்கு எப்படியும் சென்று வந்துவிடுங்கள்.

பரிகாரம் என்றால் பூஜை மட்டும் கிடையாது ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் உங்களுக்கு கிடைத்துவிடும். கோவிலுக்கு சென்ற பிறகும் நமக்கு நல்லது நடக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டால் பூஜைகள் மீது கவனம் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: