வணக்கம் நண்பர்களே !
ராகு தசாவில் புதன் புத்திப்பற்றி பார்த்து வந்தோம். இடையில் கொஞ்சம் வேறு கருத்தையும் பார்த்தோம். தொடர்ந்து ராகு தசாவில் புதன் புத்தியை நாம் பார்க்கலாம்.
ராகு தசாவில் புதபுத்தியின் காலம் 2 வருஷம் 6 மாதம் 18 நாட்கள் ஆகும்.
புத்தி நாதனான புதன் லக்கினத்திற்க்கு கேந்திரம் திரிகோணம் உச்ச வீடு சொந்த வீடு சுபகிரங்களோடு சேர்ந்து இருந்தால்
ராஜயோகம் என்று சொல்வார்கள் அல்லவா அந்தளவுக்கு அவர்க்கு புதன் புத்தியில் செய்யும். ராஜாங்க பதவியில் உள்ளவர்களை பார்க்கும் வாய்ப்பு உருவாகும். நாட்டின் பிரதமரை கூட சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இங்கிலாந்து இளவரசியை கூட சந்திக்கலாம். அது அவர் அவர் இருக்கும் நிலையை பொருத்து அமையும்.
இதுவரை திருமணம் நடைபெறாமல் இருந்தால் உங்களுக்கு பெண் தேடிவரும். திருமணம் நடைபெறும். வரும் வரனும் நல்ல நகரத்தில் இருந்து வருவார்கள்.மிகப்பெரிய பணக்கார வீட்டு வரன் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
நீங்கள் வியாபாரம் செய்துக்கொண்டு இருந்தால் உங்களின் வியாபாரம் இந்த புத்தியில் நன்றாக செல்லும். பணவரவும் நன்றாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.
நீங்கள் படித்துக்கொண்டு இருந்தால் இந்த காலத்தில் கல்வி வாய்ப்பு நன்றாக அமையும். மிகப்பெரிய தேர்வுகளை இந்த காலத்தில் எளிதில் வெல்லலாம். எப்படிபட்ட தேர்வாக இருந்தாலும் இந்த நேரத்தில் எளிதில் வென்றுவிடலாம்.
வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். ஒரு வீடு வாங்க போனாலும் இரண்டு வீடுகள் அமைந்துவிடும். ஒரு வாகனம் வாங்க போனாலும் இரு வாகனங்கள் வாங்கும் யோகம் வந்துவிடும்.
ராகு தசாவில் புதன் புத்தி நல்லதை செய்கின்றது. புதன் கிரகமும் நன்றாக அமையும் பட்சத்தில் நல்ல வளர்ச்சியை காணமுடியும். வாழ்க்கையில் கோபுரம் போல் உயரவேண்டிய காலக்கட்டம் இந்த காலக்கட்டம்
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
//புதன் கிரகமும் நன்றாக அமையும் பட்சத்தில் நல்ல வளர்ச்சியை காணமுடியும். வாழ்க்கையில் கோபுரம் போல் உயரவேண்டிய காலக்கட்டம் இந்த காலக்கட்டம்//
வணக்கம்! நல்ல நிலை என்றால் எப்படி? மீன லக்கினம். கன்னி ராசி, ராசி சக்கரத்தில் விருச்சிகத்தில் சூரியன்,புதன்,கேது. பாவ அடிப்படையில் பார்த்தால் 9 ல் சுக்கிரனுடன் புதன். இந்த அமைப்பு எப்படி?
ஐயா! கேள்வி மட்டும் பிரசுரக்கப்பட்டுள்ளது. பதிலைக் காணொமே. ஒருவேளை இது படு மோசமான அமைப்பு என்று பதிலளிக்காமல் விட்டு விட்டீர்களா?
வணக்கம் சுதாகர், ஒரு கிரகம் அமைந்த வீடு மற்றும் பார்க்கும் கிரகங்கள் நட்சத்திரபாதம் இவற்றை கொண்டு முடிவு செய்யலாம். உங்களின் முழுஜாதகத்தையும் அனுப்பி பலனை கேட்டுக்கொள்ளுங்கள்.
Post a Comment