Followers

Monday, September 16, 2013

உடல்கட்டு


வணக்கம் நண்பர்களே!
                    உடல்கட்டுப்பற்றி ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். உடல்கட்டு என்பது தன் மீது பிறர் எந்த தாக்குதலும் இல்லாமல் இருக்க உடல்கட்டு போட்டுக்கொள்வார்கள். இப்படி உடல்கட்டு போட்டுவிட்டால் அடுத்தவர்களின் கர்மாவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இப்பொழுது சோதிடம் சொல்லுபவர்கள் அனைவரும் புத்தகத்தை படித்துவிட்டு அதனை வைத்து பலனை சொல்லிக்கொண்டு உள்ளார்கள். இவர்கள் சோதிடத்தை சொல்லும்பொழுது அவர்களின் கர்மாவின் தாக்குதல் நம்மீதும் நடக்கிறது என்பதை உணராமல் சொல்லிக்கொண்டு உள்ளார்கள். அதனால் தான் சோதிடர்களின் குடும்பங்கள் சுபிட்ஷம் இல்லாமல் இருக்கின்றது என்பதை சொன்னேன். 

பிறரின் கர்மாவில் இருந்து தப்பித்துக்கொள்ள உடல்கட்டு அவசியம். நீங்கள் ஒரு குருநாதரிடம் வழியாக சோதிடம் பயின்றால் அந்த குருநாதர் உங்களுக்கு உடல்கட்டு போட்டுவிடுவார்.இது மந்திரம் வழியாகவும் உடல்கட்டு போடுவார்கள் மற்றும் மந்திரம் இல்லாமலும் உடல்கட்டு போடுவார்கள்.

ஒரு சில உடல்கட்டு இருக்கின்றது அதனை ஒருவருக்கு போட்டுவிட்டால் ஈ கூட அவரை நெருங்காது. உடல்கட்டு இல்லாமல் எந்த ஒரு ஆன்மீகவாதியும் தொழிலி்ல் இறங்கமாட்டார்கள். 

இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்கள் எல்லாம் உடல்கட்டு போட்டுக்கொள்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் பொதுவான இடத்தில் இருப்பதால் எந்த தாக்குதலும் நம்மீது இருக்ககூடாது என்று எண்ணி போட்டுக்கொள்ளுகிறார்கள். தகுந்த குருவை நாடி நீங்களும் உடல்கட்டை போட்டுக்கொண்டு நீங்களும் சோதிடதொழிலை செய்துக்கொள்ளுங்கள்.

ஓண பண்டிகையை கொண்டாடும் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

தமிழ்செல்வன் said...

ஓண பண்டிகையை கொண்டாடும் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.