வணக்கம் நண்பர்களே!
குலதெய்வ வழிபாட்டை நான் பலபேருக்கு வழியுறுத்தி சொல்லிவருகிறேன். இதனால் பலபேர்கள் நன்மை அடைந்துள்ளார்கள். பாதிபேர்களுக்கு மேல் குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய்விட்டது.
குலதெய்வத்தை மறந்து போனதன் காரணம் பல இருந்தாலும் ஒரு வேளை திட்டமிட்ட ஒரு செயலாக கூட இருக்கலாம். ஏன் என்றால் இந்து மத மக்களை ஒன்றினைக்கவேண்டும் என்று எண்ணி இதனை செய்திருக்ககூடும் என்று கூட நினைத்தேன். அந்த காலத்தில் மக்களின் முக்கிய தொழில் விவசாயமாக தான் இருந்தது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து வாழ்க்கை நடத்தினார்கள் அவர்கள் சிறு தெய்வ வழிப்பாட்டை வழிப்பட்டு வந்தனர்.
பிற்காலத்தில் நாகரீக மாற்றத்தால் அவர் அவர்கள் பிரிந்துபோய்விட்டார்கள். நகர் பகுதியில் வாழஆரம்பித்தார்கள். இதில் பல மதங்கள் உள்ளே வந்ததால் இந்து மதத்தில் உள்ளவர்களை ஒன்றினணக்க ஒரு கடவுளை மையப்படுத்திவிட்டு சிறுதெய்வங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள். சிறுதெய்வங்கள் போய் ஒரு தெய்வ வழிபாடு என்பதை கொண்டுவருவதற்க்கு இதனை செய்து இருக்கலாம்.
உண்மையில் சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள தெய்வங்கள் இந்து மதத்தில் உள்ள தெய்வங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது. இருக்கின்ற அனைத்து அம்மனையும் பராச்சக்திக்கு கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். இருக்கின்ற அனைத்து ஆண் தெய்வமும் சிவனுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். உண்மையில் இவர்களுக்கும் சிறுதெய்வத்திற்க்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது.
சிறு தெய்வ வழிப்பாடு என்பது அனைத்து மதமும் உருவாவதற்க்கு முன்பே ஒவ்வொரு மதத்திலும் உண்டு. உலகில் உள்ள அனைத்து மதத்தை தேடி பார்த்தாலும் அந்த மததில் ஒரு தீர்க்கதரிசி வருவதற்க்கு முன்பு சிறுதெய்வ வழிப்பாட்டை மேற்க்கொண்டு வந்துள்ளனர்.
காலபைரவ வழிபாடு என்பது நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் உள்ள ஒரு வகுப்பினரின் குலதெய்வம் தான். அதனை அப்படியே பரப்பி விட்டுவிட்டார்கள். நான் இதனை எல்லாம் சொன்னால் எனது நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு என்ன வேலையோ அதனை பார்க்காமல் நீங்கள் ஏன் தேவையில்லாமல் எதையாவது சொல்லுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
உங்களின் அப்பா உங்களின தாத்தா அவர்க்கு முன் இருந்தவர்கள் வணங்கிய உங்களின் தெய்வத்தை வணங்கசொல்லுவது எந்த வகையில் தவறாக இருக்கமுடியும்.
நாட்டில் சிறு தெய்வங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணம் தான் எதையாவது ஒரு தெய்வத்தை இங்கு கொண்டு வந்து வணங்குங்கள். இவர் அதை செய்வார் இதை செய்வார் என்று சொல்லுவது.
ஒரு சில இயக்கங்கள் இதனை பரப்ப இப்பொழுது தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. இது தவறான ஒன்று. ராஜராஜன்காலத்திற்க்கு பிறகு தான் நவக்கிரவழிபாடே தோன்றியது ஆனால் சிறு தெய்வங்கள் அப்படி இல்லை மனிதன் தோன்றிய நாளில் இருந்தே இருக்கின்றது. உங்களின் ஆதி எது என்று பார்த்து வணங்க ஆரம்பியுங்கள்.
உங்களின் ஆதியை விட்டுவிட்டு பிற தெய்வங்களை வணங்கசொல்லுவது தவறான ஒன்று. குலதெய்வத்தை வணங்கவேண்டும் என்று சொல்லுவதின் அர்த்தம் இது மடடுமே.
தொடர்ந்து பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
5 comments:
sir, I am from Malaysia. How do I find out about my kula deivam.Pls guide me..
Thanks.
Hi sir, I am from Malaysia. How do I find out about my kula deivam. Pls guide me. Thanks.
உங்கள் வீட்டில் உள்ள மூத்தோர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். நன்றி
I have spoken with you regarding this. My parents and other forefathers also does not about my kuladeivam. then how can i know that. Is there any other way to know about my kuladeivam.
Dear brother,
I am Christian and also our family also christian in more than 150 years .Now myself only accept Hindu.How i know my குலதெய்வm
Thanks
Antony
Post a Comment