வணக்கம் நண்பர்களே!
மேஷ ராசி மற்றும் விருச்சிக ராசியை லக்கினமாக மற்றும் ராசியாக கொண்டவர்களுக்காக ஒரு எச்சரிக்கை செய்தி. பொதுவாக கோச்சார பலன்களை போட்டு யாரையும் நான் பயமுறுத்துவது கிடையாது இருந்தாலும் இவர்களுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுத்துவது எனது பழக்கம்.
மேஷராசிக்கு இப்பொழுது கண்டசனி நடந்துக்கொண்டு உள்ளது. இது 2014 வரை இருந்தாலும் அதன் பிறகு வரும் அஷ்டமசனியும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருக்கின்றது ஆக இன்னமும் 3 1/2 வருடங்கள் 2017 வரை என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு கெடுதலான ஒரு நேரம் மட்டுமே.
விருச்சிகத்தை ராசியாக மற்றும் லக்கினமாக கொண்டவர்களுக்கும் கெடுதல் தரும் நேரம் தான். உங்களுக்கு ஏழரைசனியின் பிடியில் தற்பொழுது இருக்கின்றீர்கள். முழுமையாக ஆறு வருடங்கள் கடக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு மேஷத்தில் மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் அவர்களும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
செவ்வாயை வீட்டை உடையவர்கள் நீங்கள் இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள் அந்த சுறுசுறுப்பை முடக்குவதற்க்கு சனிபகவான் முயற்சி எடுப்பார். உங்களின் அனைத்து உரிமையிலும் கை வைத்துவிடுவார். உங்களின் பாடு பெரும்பாடாக தான் இருக்கும். உங்களிடம் சொல்லி புரியவைக்க முடியாது. கோபமும் அதிகமாக வரும். அதிவேகத்தில் நடந்துக்கொள்வீர்கள். உங்களுக்கு சொல்லி புரியவைக்கமுடியாது என்பதால் தான் சனிபகவான் உங்களை அடித்து புரியவைபபார்.
இதனை படிக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். ஏற்கனவே அடித்திருப்பார் அல்லது அடிக்க நல்ல நாள் பார்த்துக்கொண்டுருப்பார்.எப்படியோ அடிவாங்குவது உறுதி. உங்களுக்கு எப்பேர்ப்பட்ட தசா நடந்தாலும் அதனை மீறி சனிபகவானின் திருவிளையாடல் இருக்கும்.அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருபபது நல்லது.
இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் மற்றும் உங்களின் அறிவுரையை தாருங்கள் அதனை ஒரு பதிவாக போடலாம். பல பேர்களிடம் இதனை எதிர்பார்க்கிறேன். உடனே தாருங்கள். இவர்களுக்கு என்னால் முடிந்தளவு அறிவுரை மற்றும் உங்களின் அறிவுரையை கொடுக்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
6 comments:
என் மனைவிக்கு மேஷ லக்கினம் விருச்சிக ராசி... நீங்கள் சொல்வது படி பார்த்தால் இரட்டை அடி இருக்குமே...
வணக்கம் சார் மனிதன் பூமியில் பிறந்ததே அடிவாங்க தானே. இல்லை என்றால் மனிதபிறப்பு எதற்கு அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டால் அவர் பார்த்துக்கொள்வார்.
நன்றி
Sir.. Pl post a separate lesson for this pariharam... And also why Saturday is favour for perumal. What is relation between perumal and sani bagavan.
எனக்கு விருச்சிக ராசி,விருச்சிகலக்கினம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சார்.
குருவாழ்க! குருவே துணை!
வணக்கம் சார்
வேதாந்திரி மகரிஷி அவர்கள் வகுத்து கொடுத்த பஞ்சபூத நவகிரிக தவம் செய்யலாம்
ENATHU MAGAL RASI VIRUCHIGAM,STAR:ANUSHAM,
SIR,ENNA PARIKARAM,PLS TELL ME...
Post a Comment