Followers

Sunday, September 22, 2013

புகழ்ச்சி


 வணக்கம் நண்பர்களே!
                     புதன் கிரகத்தை பொருத்தவரை கொஞ்சம் புகழ்ச்சிக்கு மயங்கும் கிரகம். இந்த புகழ்ச்சியால் தான் பல சோதிடர்களை பார்த்தால் புதனின் புகழ்ச்சி மற்றும் தலைகணம் என்ன என்று தெரியும்.

ஒரு சோதிடபுத்தகத்தை படித்துவிட்டு நான் சோதிடத்தில் பெரிய புலி என்று சொல்லிக்கொண்டு திரிவது. தன் பெயருக்கு பின் சோதிடபுயல் சோதிடசிகாமணி என்ன என்ன இருக்கிறதோ அத்தனையும் சொல்லிக்கொண்டு இருப்பது. இது எல்லாம் புகழ்ச்சி மட்டுமே. இது மாதிரி நீங்கள் செய்துவிடாதீர்கள். உங்களின் சோதிடபலன் நன்றாக இருந்தால் உங்களை தேடி ஆட்கள் வரபோகிறார்கள். பிறகு எதற்கு இந்த மாதிரி பட்டம் எல்லாம். 

தமிழனுக்கு பட்டம் இல்லாமல் வாழமுடியாது என்று நினைக்கிறேன். நடிகர்களில் இருந்து சோதிடர்கள் வரை பட்டத்தோடு தான் திரிகிறார்கள். பல பேர் பார்த்தால் சோதிட ஆராய்ச்சி நிலையம் என்று வைத்துக்கொண்டு சோதிட தொழில் பார்ப்பார்கள். அதில் இதனை கண்டுபிடித்துவிட்டேன். அதனை கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்லுவது உண்மையில் இது தேவையற்ற ஒன்று. 

வரும் நபர்கள் கஷ்டத்தில் வருகிறார்கள் அவர்களிடம் நான் இந்த ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லுவது வருகின்றவர்களுக்கு நல்லது செய்தால் போதுமான ஒன்று அதனை விட்டுவிட்டு நமது பெருமையை பேசிக்கொண்டு இருப்பதற்கு அல்ல.

சோதிடபட்டத்தை வாங்கிய போட்டோவை எடுத்து அறையில் மாட்டிவைப்பது. இப்பொழுது எல்லாம் பதிவுகளில் அது தான் அவர்களின் முகப்பு பக்கமாகவே பலபேர்க்கு இருக்கின்றது.

இது எல்லாம் வேண்டியதில்லை வரும் மக்களுக்கு நல்லது செய்ய என்ன வழி என்று பார்த்தாலே போதும். கடவுளின் லீலையை கணிக்கும் தொழிலில் இருந்துக்கொண்டு வரும் மக்களுக்கு இடரை நீக்கினால் போதுமான ஒன்று. புகழ்ச்சி வேண்டாம். நீங்களாவது இதனை பின்பற்றுங்கள். உங்களிடம் நிறைய விசயங்கள் இருக்கின்றது என்றால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உங்களால் இந்த தொழிலில் வெற்றி பெறமுடியும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். நம்மால் என்ன செய்யமுடியும் என்று சொன்னால் போதும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

ATOMYOGI said...

வணக்கம்!
போன சனியன்று கேட்க நினைத்தேன். காக்கைகளுக்கு சோறு வைப்பது பற்றி சற்று விளக்கமாக சொல்ல முடியுமா? நிஜமாகவே நமது முன்னோர்கள் காகங்களாக வந்து நாம் தரும் உணவுகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியானால் இறந்த நம் முன்னோர்கள் மீண்டும் பிறப்பது இல்லையா? அப்படி பிறந்து இருந்தால் காகங்கள் உண்ணும் நாம் வைக்கும் உணவு என்னவாகும்? தயவுசெய்து என் குழப்பத்தை தீர்க்க வேண்டுகிறேன்.
நன்றி!

surya said...

ungalukku engirundhu ithanai azhagaana amman padangal kidaikkiradhu? ovvondrum parkka kan kodi vendum.

rajeshsubbu said...

வணக்கம் சுதாகர் தங்களின் கேள்விக்கு பதிவில் பதில் தருகிறேன்.

rajeshsubbu said...

வணக்கம் சூரியா சார் அனைத்தும் நெட்டில் இருந்து தேடி எடுத்து போடுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி