வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பொதுதகவலாக ஒன்றைப்பார்க்கலாம். இது உங்களுக்கு நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்.
எனக்கு எப்பொழுது குரு தசா ஆரம்பித்ததோ அன்று இருந்து எனக்கு சமையல் கலை மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. வீட்டிலும் சரி நண்பர்களின் வட்டாரத்திலும் சரி நான் சமைத்தால் அதற்கு என்று நமது நண்பர்கள் கூட்டம் இருக்கும். பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. பதிவை படிக்கும் நண்பர்கள் பல பேர்க்கும் இது தெரியும்.
ஊருக்கு செல்லும்பொழுது எனது உறவினர்கள் கூட என்னை சமையல் செய்துக்கொடு என்பார்கள். அவ்ர்களின் விருப்பத்திற்க்காக நான் சமைத்து கொடுப்பதும் உண்டு.அந்தளவுக்கு சமையல் செய்துக்கொடுப்பேன். குரு தசாவிற்க்கு இதற்கும் என்ன காரணம் என்று கேட்காதீர்கள். குரு தசா ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு இந்த பழக்கம் ஏற்பட்டது.
ஒரு காரணம் இருக்கலாம் பிறரை திருப்திப்படுத்துவதற்க்கு இது காரணமாக இருக்கலாம்.அடுத்தவரை திருப்திப்படுத்துவதற்க்கு குரு காரகம் வகிப்பார். ஒரு சமையல் நன்றாக இருப்பதற்க்கு காரணம் அதில் நாம் காட்டும் ஈடுபாடு மட்டுமே. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவாக ஒரே மசாலாவை தான் உபயோகிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சுவை தனிப்படுவதற்க்கு காரணம் ஒவ்வொருவரும் காட்டும் அன்பு மட்டுமே.
ஆண்கள் சமைப்பதை சொல்லுவதற்க்கு கூட வெட்கப்படுவார்கள். இதில் ஒன்றும் வெட்கம் கிடையாது. உலகில் மிகப்பெரிய சமையல் நிபுணர்கள் எல்லாம் ஆண்கள் தான். உங்களுக்கு சமையல் தெரிந்து இருந்தால் உங்களின் மனைவியின் இதயத்தில் கூடுதலாக அன்பை பெறமுடியும். எனக்கு மனைவி கிடையாது. குரு தசா எனக்கு சமையலையும் கற்றுதந்தது என்பதை சொல்லுவதற்க்காக தான் இந்த பதிவு.
குரு தசா நடைபெற்று கொண்டிருக்கும் ஆண் நண்பர்கள் இனி நல்ல சமைக்க கற்றுக்கொள்ளுஙகள.என்ஜாய்
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
enakum ippozhudhu guru dasa nadakirathu enathu samayaluku niraya rasigargal ullanar. sila vishayangalai neengal unnipaga gavanikireergal paaraatukal
வணக்கம்!
நீங்கள் குருதிசைக்கு சொல்லிவரும் பொது பலன்கள் அனைத்தும் எனக்கு ராகு திசையுடன் அப்படியே பொருந்தி வருகிறது. தொப்பையில் இருந்து சமையல் வரை. அது ஏன் அப்படி?
வணக்கம் Sudhagar V N உங்களுக்கு ராகு குருவின் நட்சத்திரத்தில் அல்லது குருவின் ராசியில் அல்லது குருவின் பார்வையில் இருக்கலாம் அதனால் அப்படி நடைபெறும். நன்றி
வணக்கம்!
எனக்கு குருவின் வீட்டில் சந்திரன் இருந்து திசை நடக்கிறது.
எனக்கு சமையலிலும் ஆர்வம் இருக்கிறது,தொப்பையும் வருகிறது...
பதிவுக்கு நன்றி...
Post a Comment