தயிர், நெய் குருவுக்கும் ஒற்றுமை இருக்கும். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருந்தாலும் குரு தசாவிலும் சொல்லவேண்டும் என்பதால் சொல்லுகிறேன்.
குரு தசா ஆரம்பித்தால் தயிர் சாதம் மேல் அதிக விருப்பம் ஏற்படும். அதுவும் சுயபுத்தியில் அதிகமாகவே இருக்கும். எனக்கு குரு தசாவின் சுயபுத்தியில் அதிகமாக நான் தயி்ர்சாதம் மட்டுமே சாப்பிட்டுவந்தேன். குரு தசாவை கடந்து வந்த ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் ஏற்படும்.
நீங்கள் சாப்பிடும்பொழுது அதிகமாக நெய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றும்.சில காலங்களிலேயே நெய் ஊற்றி சாப்பிடுவீர்கள். எல்லாம் அதுவாகவே நடைபெறும்.
குரு என்பவர் பிராமணர்களை குறிக்கும் கிரகம் என்பதால் அவர்களின் வழக்கத்தை ஏற்படுத்தி தருவார். பூஜை செய்வதற்க்கு மனது ஏங்கும். விதவிதமான ஊதுவத்தி வாசனை மற்றும் சாம்பிராணி வாடை எல்லாம் பிடிக்கும். வீட்டில் அதிகமாக இதனை எல்லாம் பயன்படுத்துவீர்கள்.
வீட்டை பார்த்தாலே கோவில் போன்று தோற்றமளிக்கும்.கிராமங்களாக இருந்தால் நன்றாக இருந்தாயா சாமியார் போல் ஆகிவிட்டான் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு இந்த மாதிரியான விசயங்களில் ஈடுபடுத்திவிடுவார் குரு.
சோதிடத்தை நமது வாழ்வில் ஒன்றி பார்க்கும்பொழுது அது எப்பேர்பட்ட உண்மையாக இருக்கின்றது என்று பார்க்கமுடியும். ஒவ்வொருவரின் நடத்தையை நன்றாக கவனித்தால் அனைத்தையும் சோதிடத்தில் உள்ள கிரகங்கள் தான் செய்கிறது என்று உங்களால் எளிதில் கண்டுபிடிக்கமுடியும்.
ராகு தசாவில் ஊர் சுற்றிக்கொண்டு ஊரில் அனைவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தவனை குரு தசா அந்த ஊரை ஆச்சரிப்படும் அளவுக்கு செய்கிறார் என்றால் சும்மாவா.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment