Followers

Monday, December 30, 2013

இரயில் பயண அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பயணங்கள் அதிகமாக இருக்கின்றன அப்படி வெளியூர் செல்லும்பொழுது அதிகமாக நான் பயணத்திற்க்கு தேர்ந்தெடுப்பது இரயில் பயணம் மட்டுமே. நீண்ட தொலைவு மற்றும் மறுநாள் சென்று நமது வேலையை சரியாக எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை செய்யலாம் என்ற காரணத்தால் இரயிலை தேர்ந்தெடுப்பேன்.

இரயில் பயணத்தில் அதிகமாக 2 A/C அல்லது 3 A/C யில் வகுப்பை தேர்ந்தெடுப்பேன். ஒரு சலுகை என்ன என்றால் செலவை எல்லாம் சம்பந்தப்பட்ட நபர்களே செய்வார்கள். நான் சாதாரணமான வகுப்பை தேர்ந்தெடுக்க சொன்னாலும் A/C யை தான் தேர்ந்தெடுப்பார்கள்.

A/C யை தேர்ந்தெடுத்து பயணம் செய்யும்பொழுது அங்கு நடக்கும் ஒரு சில விசயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்பதற்க்காக மட்டுமே இந்த பதிவை எழுதினேன். 

A/C. வகுப்பில் உள்ளே சென்று அமரும்பொழுது அனைவரும் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு படம் பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது அதனைவிட்டால் யாருக்காது போனை போட்டு பேசிக்கொண்டே இருப்பது. ஒரு சிலர் மறுநாள் பெரிய தேர்வு இருப்பது போல் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே இருப்பார்கள்.

பக்கத்தில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான் அவன் நம்மோடு பயணம் செய்துக்கொண்டிருக்கிறான். அவனோடு ஒரு வார்த்தையாவது பேசுவது கிடையாது. . இந்த பயணத்தில் அனுபவத்துக்கொண்டிருப்பவர்கள் சின்ன குழந்தைகள் மட்டுமே இருக்கும். ரொம்ப என்ஜாய் செய்து பயணம் செய்துக்கொண்டிருக்கும். மீதி இருக்கும் மனிதர்கள் எல்லாம் சேரும் இடத்திற்க்கு சென்றால் போதும் என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

ஒரு இடத்தில் மனிதர்கள் ஒன்று கூடினால் ஒவ்வொரு மனிதரைப்பற்றியும் தெரிந்துக்கொள்ள ஒரு நல்லவாய்ப்பாக தான் இந்த மாதிரியான பயணங்கள் இருக்கின்றன. மனிதர்கள் ஒன்று கூடி இருக்கும்பொழுது அவர்களைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம் அவர்கள் வழியாக ஒரு நல்ல அனுபவம் நமது வாழ்க்கைக்கு கிடைக்கும் இதனை எல்லாம் விட்டுவிட்டு எலெக்ட்ரானிக் உடன் வாழ்ந்துக்கொண்டிருப்பது நமது வாழ்க்கைக்கு எந்தவிதத்திலும் முன்னேற்றம் ஏற்படபோவதில்லை.

ஒரு சாதாரண வகுப்பில் நான் செல்லும்பொழுது அங்குள்ள மனிதர்களில் பாதிப்பேர் என்னோடு நன்றாக பழகிவிடுவார்கள். ஆனால் உயர்வகுப்பில் ஒருத்தர் பழகினாலே பெரிய விசயம்.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பின்றியே
இருக்கின்றனர். என்ன உளவியல் ரீதியான பயமோ ?
அப்படியும் மீறி கலகலப்பாகப் பேசுபவரை ஏற இறங்க
ஒருவேளை இவர் இன்சூரன்ஸ் ஏஜெண்டோ அல்லது நெட்வொர்க்
தொழில் புரிபவரோ என சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.
ஒத்த இயல்புடைய மனிதர்களிடம் அளவளாவி மகிழ்தல்
குறைந்து விட்டது. தகவல் தொடர்பினால் உலகம் மட்டும்
சுருங்கவில்லை ...... மனித மனங்களும்தான் !