Followers

Wednesday, June 15, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். திருவோண நட்சத்திரத்தில் எந்த கிரகம் சென்றாலும் அது நன்மை செய்யும் என்று சொல்லியுள்ளீர்கள். சனிக்கிரகம் அதில் சென்றால் நல்லது நடக்குமா என்று கேட்டார்.

உண்மை சொல்லவேண்டும் என்றால் நட்சத்திரம் என்பது உங்களிடம் சொல்லுவதே அது பரிகாரத்திற்க்காக தான் சொல்லுகிறேன். நம்மை தேடி வருபவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதற்க்காக சோதிடத்தை பல வழிகளிலும் கையாண்டு அவர்களுக்கு நல்லது செய்துக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். 

நட்சத்திரம் என்பதும் ஒரு வழி அதாவது நட்சத்திரம் வழியாக பரிகாரம் செய்வதற்க்கு பயன்படுத்தும் வழி. இதனை நீங்கள் பரிகாரமாக செய்ய மட்டும் பயன்படுத்துங்கள். 

நீங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அந்தந்த நட்சத்திரம் வரும்பொழுது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும் உங்களுக்கு ஒரளவு நன்மை வந்துவிடும்.

கொஞ்சம் பெரிய அளவில் நாம் சாதிக்கவேண்டும் என்றால் நட்சத்திர பரிகாரம் செய்யவேண்டும் அதற்க்கு நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: