வணக்கம்!
பல பேர்கள் தற்பொழுது நட்சத்திரம் என்பதைபற்றி அதிக கேள்விகள் கேட்கிறார்கள். பல நண்பர்கள் ஜாதகத்தையும் அனுப்பியுள்ளார்கள்.
இது ஒன்றும் பெரிய விசயம் எல்லாம் கிடையாது. உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்தந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை காட்டுவது தான் நட்சத்திரம். பெரும்பாலும் சோதிடர்கள் இதனை கணித்து சொல்லுவார்கள்.
என்னைப்பொறுத்தவரை நட்சத்திரத்தை வைத்து பரிகாரம் செய்வதற்க்கு பயன்படுத்துவது உண்டு. கொஞ்சம் பெரிய இடத்தில் உள்ளவர்கள் இதனை வைத்து நிறைய காரியங்களை சாதிக்க வழி செய்ய சொல்லுவார்கள். நானும் அதனை செய்துக்கொடுப்பது உண்டு.
எல்லாவற்றையும் சோதிட ரீதியாக அலசி செய்யும் வேலை நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு செய்யும் வேலை. இதனை நீங்களே பார்த்து அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் என்னை அணுகி இதனை செய்துக்கொள்ளலாம். கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment