வணக்கம்!
பல நண்பர்கள் நல்ல வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தாலும் அவர்களுக்கு அடி மேல் அடி விழும். சோதிடம் மற்றும் ஆன்மீகம் மேல் எல்லாம் நம்பிக்கையே போய்விடும் அளவிற்க்கு நம்ம நண்பர்களுக்கு விரக்தி வந்துவிடும்.
ஆன்மீக பக்கம் போகலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்க எல்லாம் வைத்துவிடும். உதாரணத்திற்க்கு என்னை எடுத்துக்கொள்ளலாம். பல அடிகளை நான் வாங்கி இருக்கிறேன் ஆனால் நம்பிக்கையை மட்டும் நான் இழக்கவே இல்லை.
நிறைய காேவில்களுக்கு செல்லும்பொழுது எல்லாம் எனக்கு எந்த ஒரு விரக்தியும் தோன்றவில்லை. வாழ்க்கையில் விரக்தி வந்தது உண்டு ஆனால் கோவிலுக்கு செல்வதை விடவில்லை.
நமக்கு நடக்கும் தசாவின் காலம் அதிகமாக இருந்தது என்றால் நமக்கு கஷ்டம் அதிகம் போல் இருக்கும். கெடுதல் தரும் தசாவின் காலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். அந்த நேரத்தில் நான் கோவில் கோவிலாக அலையமட்டும் தான் முடியுமே தவிர எந்த ஒரு நல்லதையும் எதிர்பார்க்கமுடியாது.
கஷ்டகாலத்தில் நாம் கும்பிட்ட தெய்வத்தின் அருள் ஒரு நல்ல தசா வரும்பொழுது அள்ளி அள்ளி கொடுக்கும் என்பது மட்டும் அனுபவ உண்மை.எந்த நிலையிலும் தெய்வத்தை மட்டும் மறக்காமல் இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல நிலைக்கு நாம் வந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment