வணக்கம்!
சனிக்கிரகம் தன்னுடைய வேலையை மெதுவாக செய்தாலும் மிக சரியாக செய்யக்கூடிய ஒரு கிரகம். ஒருத்தருக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் முதலில் அவர்க்கு சனியின் பிடிப்பில் இருக்கின்றதா என்பதை பற்றி தான் பார்ப்போம்.
ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டமனி கண்டசனியாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிரகத்திற்க்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு அவரின் வேலை என்னவே அதற்கு பரிகாரம் செய்வோம்.
எந்த ஒரு நல்ல வேலையையும் தடை செய்கின்ற ஆற்றல் சனிக்கிரகத்திற்க்கு உண்டு. நாம் எதனை செய்தாலும் அதனை தடுத்துவிடும். காரியம் தடை ஏற்பட்டவுடன் நாம் என்ன செய்யமுடியும் அதனால் சனிக்கு பரிகாரம் செய்துவிடுங்கள்.
ஏழரை சனியாக இருந்தாலும் அதனை முதலில் நம் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு அந்த ஏழரைக்கு தகுந்தவாறு பரிகாரத்தை செய்யவேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஏற்படும் தடை விலகி உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
சனி என்ற கிரகம் செயல்படும் விதம் அப்படிப்பட்டது. அதற்கு கடிவாளம் நாம் போடவேண்டும் என்றால் தெய்வ அருள் அதற்கு துணை வேண்டும். தெய்வ அருளோடு பரிகாரத்தை செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment