வணக்கம்!
நட்சத்திரம் எதற்க்கு பயன்படுகிறது என்பதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். என்னை பொறுத்தவரை பெரும்பாலும் நட்சத்திரத்தை வைத்து தான் பரிகாரம் அதிகளவில் செய்யப்படுகிறது. உதாரணத்திற்க்கு நீங்கள் கோவிலுக்கு சென்றால் உங்களின் நட்சத்திரம் என்ன என்று தான் கேட்பார் ஐயர் நாம் நமது நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வார்கள். நட்சத்திரத்திற்க்கு அதிகளவில் பயன் இருக்கின்றது.
மேலே உள்ள ஜாதகத்தை கொடுத்து ராகு கிரகத்தை மேம்படுத்தி தாருங்கள் என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ராகு கிரகம் வழியாக எதையோ எதிர்பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு இந்த பரிகாரத்தை செய்வோம் என்று வைத்துக்கொள்வோம் எப்படி செய்வேன் என்பதை உங்களுக்கு சொல்லுகிறேன்.
ராகு கிரகத்திற்க்கு செய்தால் அது பிரச்சினையை கொடுக்கலாம். ராகு கிரகம் லாபத்தில் இருந்தாலும் லக்கினத்திற்க்கு அதிபதியான குரு கிரகம் செல்லும் நட்சத்திரம் இராகுவின் நட்சத்திரம். சுகவீடான வீட்டில் இருக்கிறது. ராகுவிற்க்கும் குருவிற்க்கும் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளாது. ராகுவிற்க்கு செய்யமாட்டேன். அதற்கு மாறாக ஒன்றை செய்வேன்.
ராகு செல்லும் நட்சத்திரம் திருவோணம். திருவோணம் நட்சத்திரம் சந்திரனோட நட்சத்திரம். சந்திரனுக்கு செய்தால் போதும் என்று சந்திரனுக்கு செய்வேன். இப்பொழுது பாருங்கள்
திருவோணம் 1 பாதத்தில் சுக்கிரன் செல்கிறது.
திருவோணம் 4 பாதத்தில் ராகு செல்கிறது.
சந்திரன் செல்லும் நட்சத்திரம் மகம் 3 பாதத்தில் செல்கிறது.
சந்திரனுக்கு மட்டும் மிகச்சரியான ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் பல நன்மைகளை ஜாதகர் பெற்றுவிடுவார்.
சந்திரனுக்கு செய்யும்பொழுது ஜாதகரின் வீடான ஆறாவது வீடு கடுமையான பாதிப்பை தரும் என்று நினைக்கலாம். ஒன்றும் பெரிய பிரச்சினை வந்துவிடபோவதில்லை.
ராகுவை எல்லாம் ஒருவர் வேலை செய்ய வைக்க வருகிறார் என்றால் அவர் சாதாரணப்பட்ட நபராக நான் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு பெரிய Project க்கு தான் வருவார்.
சந்திரனின் வீடான ஐந்தாவது வீட்டின் புண்ணியத்தை எடுத்து ஆறாவது வீட்டின் கடனை வாங்கி எப்படி என்றால் எந்த பெரிய வேலையும் வங்கியில் கடன் வாங்காமல் நடக்காது வங்கியில் கடனை வாங்க வைத்து லாபத்தில் இருக்கும் ராகு லாபத்தை கொடுக்க வைக்க இப்படி செய்வது உண்டு.
அன்பு நண்பர்களே அனைத்தும் ஒரு கணக்கில் தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. நன்றாக தெரிந்தவனுக்கு மிகச்சரியாக ஒரு ஜாதகத்தை செயல்பட வைக்கமுடியும் என்பதற்க்கு ஒரு சின்ன உதாரணத்தை கொடுத்தேன். இன்னமும் இதில் பல வேலைகளை செய்து தான் செயல்படுத்துவது உண்டு.
உங்களை செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை முயன்று பார்த்து செயல்படுத்துங்கள். அதோடு எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். வாழ்த்துக்கள். அடுத்த ஒரு நல்ல வேலையில் ஒரு ஜாதகத்தை வைத்து இப்படி பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment