Followers

Tuesday, June 28, 2016

பரிகாரம்

ணக்கம்!
          ஒவ்வொரு பதிவுக்கும் நமது நண்பர்கள் கேட்பது சார் பரிகாரம் சொல்லுங்க சார் என்று தான் கேட்பார்கள். எளிமையாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் அந்த கிரகத்திற்க்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யுங்கள் அல்லது தீபம் ஏற்றுங்கள் என்பதை தான் சொல்ல முடியும்.

இன்றைய தேதியில் அனைவரும் இதனை ஒவ்வொரு கோவிலும் செய்வார்கள். தினமும் கோவிலுக்கு சென்று ஏதாவது ஒன்றை செய்துக்கொண்டு தான் வருகின்றார்கள். அனைவரும் இதனை செய்தாலும் பரிகாரம் என்பது வேறு விதமாக அமைகிறது.

பல வருடங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று பயிற்சி செய்து அம்மன் வழியாக அனைத்து பரிகாரமும் வேலை நடக்கிறது. அம்மனின் சக்தியை பயன்படுத்தி செய்கிறேன். அம்மன் சக்தி இல்லை என்றால் கண்டிப்பாக பரிகாரம் வேலை செய்யாது.

பல இடங்களில் ஜாதகத்தை மீறி வேலை நடப்பது எல்லாம் அம்மனின் சக்தியை தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்றைக்கு பல பேர்கள் நன்றாக வாழ்வதற்க்கு அம்மன் சக்தி தான். 

ஒன்றை மட்டும் செய்வது உண்டு கிரகத்தை சாந்தப்படுத்த அந்தந்த கிரகத்திற்க்கு சம்பந்தப்பட்டவரேயே ஒரு பரிகாரம் அதாவது ஏதாவது அபிஷேகம் அர்ச்சனை அல்லது தீபம் ஏற்றசொல்லுவேன். அதன் பிறகு அம்மனை வைத்து அவர்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு. வெளிநாட்டு நண்பர்களுக்கு எதுவும் சொல்லாமல் செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.

நான் எழுதும் அனைத்து கிரகங்களின் பாதிப்பிற்க்கும் தனிப்பட்ட பரிகாரம் எல்லாம் இல்லை என்பது மட்டுமே உண்மை. சரி அம்மனை வைத்து செய்வது என்றால் பணம் கேட்பீர்கள் அதற்கு நாங்கள் என்ன செய்வது என்று கேட்கலாம்.  

தன்னை ஒருவன் சரி செய்துக்கொள்ளவேண்டும் என்றால் கண்டிப்பாக அவன் தனக்கு என்று கொஞ்சம் செலவு செய்தே ஆகவேண்டும். எனக்கு ஜாதககதம்பத்தில் இருந்து வருபவர்களை விட நான் நேரிடையாக சோதிடம் பார்த்து வருபவர்கள் அதிகம். அவர்கள் ஒரு சிலர் ஏழையாக இருந்தவர்கள் தான் அவர்களுக்கு எல்லாம் இலவசமாக தான் செய்துக்கொடுத்து இருக்கிறேன். ஜாதககதம்பத்தில் இருந்து நேரிடையாக என்னை வந்து சந்தித்து கண்டிப்பாக நீங்கள் ஏழையாக இருந்தால் இலவசமாக செய்துக்கொடுத்துவிடுவேன்.

தன்னை சரிசெய்துக்கொண்டால் தான் நாம் முன்னேற்றம் அடையமுடியும் என்பதை தெரிந்துக்கொண்டு ஏதோ என்னுடைய வளர்ச்சியை தடுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு தேடுதல் செய்யும்பொழுது தான் எனக்கு இது எல்லாம் கிடைத்தது. 

உங்களின் தோஷத்தை சரி செய்யாமல் எதுவும் பெரியதாக நடந்துவிடாது என்பதை புரிந்துக்கொண்டு அதனை சரிசெய்துக்கொண்டு உங்களின் வாழ்க்கையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம். தோஷத்தை நீ்க்காமல் எதுவும் நடக்காது என்பது மட்டும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: