வணக்கம் !
ஒருவருக்கு பிரச்சினை என்று வந்தவுடன் ஜாதகத்தை பார்ப்பதைவிட அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டால் போதும் அதிலேயே பிரச்சினை குறைந்துவிடும்.
இன்றைய காலத்தில் அதுவும் இந்தியர்களுக்கு இருக்கும் பொறாமை என்பது உலகத்தில் எவருக்கும் இருக்காது என்று நினைக்கிறேன். இந்தியர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் பொறாமைப்படுவார்கள். இந்த பொறாமையால் ஏற்படும் கண் அடி ஒருவரை வீழ்த்திவிடும்.
கிராமபுறங்களில் இது அதிகம் என்று சொன்னால் கூட இன்று நகர்புறத்திலும் இது அதிகமாக இருக்கின்றது. உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் கண்களால் உங்களை பார்த்தே வீழ்த்திவிடுவார்கள். உங்களை ஒருவர் நன்றாக உற்று நோக்க ஆரம்பித்தாலே நீங்கள் வீழ தொடங்கிவிடுவீர்கள்.
ஜாதககதம்பத்தில் பழைய பதிவுகளில் கண் திருஷ்டியைப் பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். அதனை படித்து பாருங்கள். உங்களின் ஜாதகத்தை பார்ப்பதற்க்கு முன்பு ஒரு முறை திருஷ்டி போட்டு பாருங்கள். திருஷ்டி வாரம் இருமுறை போடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் என்பது இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment