Followers

Monday, June 27, 2016

நட்சத்திரம்


வணக்கம்!
          நம்முடைய ஆட்கள் இந்த நட்சத்திரத்தை படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து பேராவது இதனைப்பற்றி கேட்காமல் இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு ஈடுபாடு நட்சத்திரத்தின் பேரில் உங்களிடம் இருக்கின்றது. 

பல நண்பர்கள் எப்படியும் நன்றாக வாழவேண்டும் என்று முயற்சி செய்வது வரவேற்கதக்கது. கண்டிப்பாக என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்வேன். ஒவ்வொருவரும் ஜாதகத்தை காண்பித்து அதனைப்பற்றி  தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வளர்ச்சி கண்டிப்பாக நன்றாக இருக்கவேண்டும் என்றால் எங்களின் பூஜை உதவி செய்யும். ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் நாமே கட்டமுடியாது கொத்தனார் தேவை அல்லவா. அதுபோல தான் எங்களின் வேலையும். எங்களை கொண்டு தான் இது எல்லாம் செய்யமுடியும். 

நீங்களே செய்துக்கொள்கிறேன் என்று வரும்பொழுது அதற்கு நான் தடை சொல்லுவதில்லை. அதற்கு உள்ள வழியை சொல்லுவேன். கண்டிப்பாக உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி அதற்கு வழி தேடிக்கொள்ளுங்கள்.

பூஜை முறைகளை மட்டும் கேட்கவேண்டாம். எங்களின் பூஜை முறை நான் செய்தால் மட்டுமே வெற்றி பெறும். நான் செய்யாமல் எப்படி செய்தாலும் வெற்றி பெறவே பெறாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: