வணக்கம்!
புதன் கிரகத்தை எல்லாம் நாம் சோதிட கணக்கில் எடுத்துக்கொள்வது எல்லாம் இருக்காது. பொதுவாக நீங்கள் சோதிடம் பார்க்க சென்றால் உங்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சனி குரு இத்தோடு கதை முடிந்துவிடும். அவ்வப்பொழுது வரும் கோச்சாரபலன்களை வைத்து பலனை சொல்லி அனுப்பிவிடுவார்கள்.
லக்கினாதிபதி சனி குரு மற்றும் கோச்சாரபலன்கள் மட்டும் தான் முதன்மை என்றால் பிறகு உள்ள கிரகங்கள் எல்லாம் எதற்க்கு சம்பந்தமில்லாமல் வைத்திருப்பார்களா நாம் சோம்பேறி பட்டுக்கொண்டு அதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் வேலை செய்யும் ஆனால் நாம் தான் அதனை பார்ப்பதில்லை என்பது மட்டும் உண்மை.
இன்றைக்கு நாட்டில் பல சோப்பு கம்பெனிகள் வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கின்றன. இது அனைத்தும் பல கோடிகளை அள்ளி கட்டிக்கொண்டு இருக்கின்றது அதற்கு காரணம் உங்களின் உடலில் உள்ள தோல். உங்களின் தோல் நன்றாக இருப்பதற்க்கு புதன் காரகமாக இருக்கிறார். பல காரத்துவம் உடையவர் தான் புதன் நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.
தோல் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நாம் சோப்பு மற்றும் அழகுசாதனம் எல்லாம் பயன்படுத்துகிறோம் அது எல்லாம் புதன் என்ற கிரகத்திற்க்கு தான் என்பதை மறக்கவேண்டாம். இப்படி பல காரத்துவம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் இருக்கின்றது. அதனை எல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களின் ஜாதகத்தை கணியுங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment