வணக்கம்!
சோதிடத்தை வைத்து செய்வதற்க்கு அனைத்திலும் எனது குரு தான் வழிகாட்டி. ஒருவர்க்கு சனி பிரச்சினை கொடுத்துக்கொண்டிருக்கும் எனது குரு சொல்லுவார் செவ்வாய் கிரகத்தை வைத்து பரிகாரம் செய் என்பார். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு இது புரியவில்லை.
தற்பொழுது நான் பலருக்கு செய்யும்பொழுது இது எல்லாம் எனக்கு தெரியவருகிறது. அதாவது ஏதோ ஒரு கிரகம் பிரச்சினை கொடுக்கிறது என்றால் நாங்கள் எதாவது ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்து சரி செய்வது உண்டு.
இது முற்றிலும் சோதிட ரீதியாக தவறாக இருந்தாலும் ஆன்மீக ரீதியாக சரியாக வருகின்றது. ஒன்று கடுமையாக வேலை செய்யும்பொழுது அதற்கு எதிர் திசையில் சென்று வேறு வேலையை செய்து அதனை மடக்குவது என்பது ஒரு கலை.
பல நண்பர்களுக்கு இதனை செய்து நான் வெற்றி கண்டு இருக்கிறேன். சோதிட ரீதியாக கண்டிப்பாக இது தவறாக இருக்கும் ஆனால் நல்ல பலனை கொடுக்கிறது.
நம்மை பொறுத்தவரை உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதை நமது நண்பர்கள் கேட்பதில்லை. ஜாதகத்தை கொடுத்து நல்லது நடக்கவேண்டும் என்று மட்டும் சொல்லுவார்கள் நானும் அவர்களுக்கு தகுந்தவாறு செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment