வணக்கம்!
நட்சத்திரத்தை பற்றி எழுதிய பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு எனக்கு இதனை செய்து தாருங்கள் என்று கேட்டார். உடனே நான் அதனை செய்ய மறுத்துவிட்டேன். காரணமும் என்ன என்றால் ஒரு புதிய நபர் வந்து உடனே எனக்கு இதனை செய்து தாருங்கள் என்றாலும் அதனை செய்வதில்லை.
ஒருவர் பணம் தருகிறார் என்றாலும் அதற்கு போவதில்லை. கடவுள் எனக்கு நன்றாக அளக்கிறார். எதற்கு முன் பின் தெரியாதவர்களிடம் சென்று செய்யவேண்டும் என்ற காரணத்திற்க்காக இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
ஒருவருக்கு ஒரு ஜாதகத்தை எடுத்து ஒரு நல்லது செய்யவேண்டும் என்றாலும் அவர் ஏதாவது ஒரு வழியில் புண்ணியம் செய்து இருக்கவேண்டும். புண்ணியம் செய்து இருந்தால் அவருக்கு இயற்கையாகவே இதனை செய்ய தூண்டுதல் இருக்கும்.
இன்றைக்கு இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் சும்மா சென்று நீங்கள் உங்களின் நட்சத்திரத்திற்க்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். அதற்கே நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். இதற்கே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்பொழுது நட்சத்திரத்தை வைத்து பல வேலைகள் செய்யும்பொழுது பயன் எப்படி கிடைக்கும்.
இருட்டில் இருக்கும் உங்களுக்கு ஜாதகம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி. அந்த வழிகாட்டியை மிகச்சரியாக பயன்படுத்தும் ஒரு லைட் நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தை வைத்து இருட்டு உலகத்தை வெளிச்ச உலகமாக மாற்றமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment