வணக்கம்!
பணத்திற்க்கு குரு காரகன் வகிக்கிறார் என்றாலும் ஒரு சிலர் குருவை மதிக்காமல் நல்ல சொத்துக்களை சேர்த்து செல்வவளத்தோடு திகழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி சேர்த்தார்கள் என்று கேட்கலாம் அல்லவா.
குரு கிரகத்திற்க்கு எதிராகவும் கிரகங்கள் இருக்கின்றனவா அல்லவா அவர்கள் அப்படி கொடுப்பார்கள். குரு கிரகத்திற்க்கு எதிராக உள்ள கிரகங்களும் கொடுக்கும் ஆனால் என்ன என்றால் திடீர் என்று அது ஆபத்தில் கூட கொண்டு சென்று விட்டுவிடலாம்.
நீங்கள் பல பேரை இப்படி பார்த்து இருக்கலாம் அதாவது நல்ல பணக்காரர்களாக இருந்துவிட்டு திடிர் என்று மரணம் எய்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள்.
நாம் சம்பாதிப்பது பல தலைமுறைக்கு செல்லவேண்டும் நமது வாரிசுகளுக்கும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான ஒரு வழியை தேர்ந்தெடுப்பார்கள்.
குரு கிரகம் வழியாக அதாவது பாக்கியஸ்தானம் வழியாக நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வையுங்கள் அது தான் உங்களுக்கும் உங்களின் வாரிசுகளுக்கும் நல்லது.
இன்று திருச்சி செல்கிறேன். திருச்சியில் உள்ளவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment