Followers

Sunday, June 12, 2016

பேய்க்கும் மருத்துவம் நோயுக்கும் மருத்துவம்


ணக்கம்!
          இரண்டு மாதத்திற்க்கு முன்பு ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். அவருக்கு உடல்நிலையில் பெரிய பிரச்சினை பல மருத்துவமனையை பார்த்தும் சரியில்லை என்று சொன்னார். நிறைய பணம் செலவாகிவிட்டது என்றார்.

அவரின் ஜாதகத்தை பார்த்தால் அவரின் ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டு அதிபதியோடு தொடர்புக்கொண்டு இருந்தது. அவருக்கு அது சம்பந்தப்பட்ட தசாவும் நடந்துக்கொண்டிருந்தது. 

அவருக்கு என்று ஒரு பரிகாரம் செய்தேன். அந்த பரிகாரம் நன்றாக வேலை செய்தது. இன்று ஒரளவு அந்த வியாதியில் இருந்து விடுதலையாகி வருகிறார். 

முற்காலத்தில் ஒரு வியாதி வந்தால் சொல்லுவார்கள். பேய்க்கு மருந்துவம் பார்க்கவேண்டும் அதோடு மருத்துவத்தையும் பார்க்கவேண்டும் என்பார்கள். உங்களுக்கும் ஏதாவது ஒன்று நடந்தால் அதாவது ஏதாவது நோய் வந்தால் உங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிட்டு அதற்கு பரிகாரம் செய்துவிடுங்கள். அதன் பிறகு மருத்துவத்தையும் பாருங்கள்.

இன்று மருத்துவம் நன்றாக இருந்தால் கூட முதலில் நீங்கள் ஜாதகத்திற்க்கு பரிகாரம் செய்துவிட்டு மருத்துவத்தை ஆரம்பித்தால் உங்களின் நோய் உடனே தீரும். பேய்க்கு மருத்துவம் என்று சொன்னது ஜாதகத்திற்க்கு தான். ஜாதகத்திற்க்கு மருத்துவம் பார்க்கவில்லை என்றால் எத்தனை மருத்துவம் பார்த்தாலும் நோய் தீராது.

மருத்துவமனைக்கு செய்யும் செலவில் ஒரு சதவீதமும் கூட பரிகாரத்திற்க்கு என்று வராது. நம்ம ஆள்கள் பரிகாரத்திற்க்கு ஏன் செலவு செய்யவேண்டும் என்று இதனை விட்டுவிட்டு மருத்துவமனையே கதி என்று கிடைப்பார்கள். அப்படி இருக்கும் நபர்களுக்கு பணம் தான் செலவு ஆகுமே தவிர நோய் தீராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: