வணக்கம் !
நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அவர்களின் அனுபவத்தை சொல்லிருக்கின்றனர். பலர் இதனை செய்யபோய் நிறைய கஷ்டப்பட்டு அதன் பிறகு அதனை நடத்தி இருக்கின்றனர்.
ஒரு ஆன்மீக நிகழ்வு நடைபெறுவதற்க்கு நமது பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியம் இருக்கவேண்டும். நமது பூர்வபுண்ணியம் நமக்கு வாய்ப்பை வழங்கும் அதனை நிறைவேற்ற பாக்கியஸ்தானம் வேலை செய்யவேண்டும்.
இன்றைய காலத்தில் நாம் பத்தாயிரம் கூட எளிதில் செலவு செய்துவிடலாம். அந்த பணத்தை எடுத்து ஒரு ஆன்மீகநிகழ்வு நடத்தவேண்டும் என்றால் அது எளிதில் நடந்துவிடமுடியாது. நடத்துவதற்க்கும் நமது பூர்வபுண்ணியம் வழிவிட்டுவிடாது. முதலில் அப்படிப்பட்ட வாய்ப்பு வருவது கூட கடினமான ஒன்று தான்.
ஒவ்வொருவருக்கும் நாம் சொல்லுவது ஏதாவது ஒரு ஆன்மீகநிகழ்வில் சென்று பங்குக்கொள்ள பாருங்கள். இப்படி எல்லாம் நாம் பங்குபெற்றுவிட்டால் அதிகபட்சம் கிரகத்தில் இருந்து வரும் பாதிப்பு குறைந்துவிடும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது நமது கர்மா குறையும்.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு கூட நம்மால் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வரமுடியாது. அப்படிப்பட்ட கர்மாவில் எல்லாம் நம்ம ஆட்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment