வணக்கம்!
ராகு கேதுவை பொறுத்தவரை எந்த வீட்டில் இருப்பது என்பதை விட எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை நன்றாக கவனித்தால் அந்த நட்சத்திர அதிபதியின் பலனை அப்படியே கொடுக்கும்.
இன்றைய தினத்தில் ராகு சென்றுக்கொண்டு இருக்கும் நட்சத்திரம் பூரம். பூரம் நட்சத்திரம் 3 ம் பாதத்தில் ராகு செல்கிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் . சுக்கிரனின் குணத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பூரம் 3 ம் பாதத்தில் குருவும் செல்கிறது. ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் இரண்டு கிரகமும் செல்கிறது.
தோராயமான பலன் என்று பார்த்தால் நட்சத்திர அதிபதி மற்றும் அதே நேரத்தில் செல்கின்ற குருவின் பலனையும் சேர்த்து கொடுக்கலாம். அதே நேரத்தில் குருவுக்கும் ராகுக்கும் ஒத்துவராது. பலனை சரியாக கொடுக்கமுடியாமலும் போகலாம்.
சுக்கிரனின் குணத்தை கொடுக்கவேண்டும். சுக்கிரனின் குணம் கொடுக்க முடியாமல் இருப்பதற்க்கு அதில் செல்லும் குருவின் கிரகம் தன்னுடைய பகைமையை காட்டுவதால் முழுபலன் கிடைக்காவிட்டாலும் ஒரளவு பலனை கொடுக்கும்.
நட்சத்திரம் என்று வந்தால் துல்லியமான பலனை எதிர்பார்க்கலாம். அதற்கும் தற்பொழுது இன்றைய நாளில் செல்வது போல் சென்றால் கொஞ்சம் பிரச்சினையான பலனை கொடுக்கும். தெய்வீக அருளோடு பலன் சொல்லும்பொழுது மிக சரியான பலனை கொடுத்துவிடலாம்.
உங்களின் ஜாதத்தை எடுத்து அதனை நன்றாக பொறுமையாக பார்த்தால் நமக்கு தேவையானபடி ஒரு சரியான திசையை நோக்கி சென்றுவிடமுடியும். சோதிடம் சொல்லுபவர் சரியாக இருந்தால் எல்லாம் நடக்கும் அவர் சரியில்லை என்றால் பார்க்கிறவன் பாடு திண்டாட்டம் தான் என்று சொல்லலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment