வணக்கம்!
காலையில் எழுதிய பதிவை படித்து விட்டு பல நண்பர்கள் சந்தேகம் கிளப்பினார்கள். மொத்தத்தில் இதனை எல்லாம் அனைவராலும் செய்துவிடமுடியாது. கொஞ்சம் அதிக எதிர்பார்ப்போடு இருப்பவர்களுக்கு இதனை செய்யலாம்.
கடந்த வருடத்தில் மட்டும் ஒரு நபருக்கு இதனை செய்தேன். பல பேர்கள் என்னை தேடிவந்து இதனை கேட்டார்கள் ஆனால் அனைவரும் இதனை பிடித்து வரமுடியவில்லை. இதற்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கும்பொழுது மட்டுமே சாத்தியப்படும்.
இன்றைய காலத்தில் நாம் ஒரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதே கடினம் அப்படி இருக்கும்பொழுது நாம் எப்படி இதனை எல்லாம் செய்யமுடியும். நம்ம கர்மா அனைத்தையும் தடுத்துவிடும்.
நீங்கள் உங்களின் ஜாதகத்தை எடுத்து நல்லமுறையில் கணிக்கமுடிகிறது என்பதை பாருங்கள். ஜாதகம் இதுவரை கடந்து வந்த பாதையை எப்படி கிரகங்கள் கொடுத்தன இனிமேல் வருவது என்ன என்பதை பாருங்கள். அதனை பார்த்து தெரிந்துக்கொண்டாலே போதும்.
ஜாதகத்தை வைத்து சரியான முறையில் பலனை நாம் கண்டுபிடிப்பதே ஒரு சவாலான காரியம். ஜாதகத்தை வைத்து பல வேலைகள் செய்யலாம் என்பதை காட்டுவதற்க்கு இதனை சொன்னேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment