வணக்கம்!
திடீர் என்று ஒரு சில பரிகாரங்கள் செய்ய வேண்டிய காரணத்தால் உங்களுக்கு பதிவை அளிக்கமுடியவில்லை. இனி தொடர்ந்து பார்க்கலாம். தினமும் பதிவை எதிர்நோக்கி பல பேர் இருக்கின்றனர் அவர்களுக்கு கொடுக்கமுடியவிலலை என்ற காரணத்தால் சொன்னேன்.
அம்மன் அருளால் அடுத்த வாய்ப்பை உங்களுக்கு தருகிறேன். பொதுவாக நமது நண்பர்கள் தொடர்ந்து ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்க சார் என்பார்கள். அதாவது பொதுவாக ஒரு பரிகாரத்தை சொல்லுங்க என்பார்கள்.
பொதுவான ஒரு பரிகாரம் என்பது அனைவருக்கும் வேலை செய்யாது. ஏதாவது ஒரு சில நேரத்தில் வேலை செய்யும். எல்லாருக்கும் வேலை செய்துவிடாது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்பொழுது உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த கிரகம் பிரச்சினை தருகிறது என்பது முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்த கிரகத்தால் தான் பிரச்சினை வருகிறது என்றால் உடனே அந்த கிரகத்திற்க்கு சென்று அது எந்த நாளாக இருந்தாலும் சரி ஒரு தீபம் ஏற்றிவிட்டு அதன் பிறகு அந்த கிரகத்திற்க்கு ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வாருங்கள்.
கண்டிப்பாக அந்த பிரச்சினையில் இருந்து ஒரளவு விடுபட்டுவிடலாம். நாம் என்ன டா இது எல்லாம் பரிகாரமா என்று கேட்க தோன்றும். உண்மையாகவே இது நன்றாக வேலை செய்யும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment