Followers

Thursday, June 16, 2016

பணம் பணம் பணம்

ணக்கம்!
          இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று பணம். பணத்திற்க்காக தான் அதிக போராட்டம் நடக்கிறது. பணத்தைப்பற்றி நிறைய நானும் சொல்லிருக்கிறேன்.

பணம் வேண்டுமானால் நாம் சோதிட ரீதியாக நிறைய ஆலோசனை சொல்லுவதும் உண்டு. நட்சத்திரத்தை வைத்து ஒன்றையும் நாம் சொல்லிவிடவேண்டும். பணத்திற்க்கு முதலில் குரு கிரகம் தான் வரும். நம்முடைய ஜாதகத்தில் குரு கிரகம் சரியில்லை என்றால் நமக்கு அவ்வளவு எளிதில் பணம் வந்துவிடாது.

முதலில் குரு கிரகம் நமக்கு நன்றாக இருக்கவேண்டும் என்றால் நம்முடைய முன்னோர்கள் ஆன்மீகத்தில் இருந்து இருக்கவேண்டும் அல்லது ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்து இருக்கவேண்டும். 

நம்ம ஆட்கள் ஒன்று கோவிலை இடிக்க கோவிலுக்கு சென்று இருப்பான் அல்லது ஐயர் தட்டில் இருப்பதை பிடிங்கி தின்பதற்க்கு கோவிலுக்கு போயிருப்பான். நமக்கு எப்படி குரு நன்றாக இருக்கும்?

ஐாதககதம்பம் படிக்கும் உங்களின் குழந்தைகள் அனைவருக்கும் குரு கிரகம் நன்றாக இருக்கும். நீங்கள் ஆன்மீகவாதி என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

குரு கிரகம் தான் சரியில்லை நமக்கு எப்படியாவது பணம் பார்க்கவேண்டும் அதாவது நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பு இருக்கும் அல்லவா. அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் அதாவது இரண்டாவது வீட்டுக்குரிய கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து அதற்கு பரிகாரம் செய்தால் போதும்.

இரண்டாவது வீட்டுக்குரிய நட்சத்திர அதிபதிக்கு நீங்கள் பரிகாரம் செய்யும்பொழுது உங்களின் தன வீடு நன்றாக வேலை செய்து உங்களுக்கு பணம் வர ஆரம்பிக்கும்.

விரைவில் மதுரையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: