Followers

Friday, June 3, 2016

பணம் தரும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரனின் காரத்துவம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணம் என்ற ஒன்று எந்தவித தடங்களும் இல்லாமல் இருந்துக்கொண்டே இருக்கும். இன்று உலகத்தில் இருக்கும் ஒரு மதத்தினர்க்கு அதிகளவில் பணம் வருவதற்க்கும் சுக்கிரன் தான் காரணமாக இருக்கிறார். வெள்ளிக்கிழமை வழிபாடு செய்பவர்களுக்கு சுக்கிரன் காரத்துவம் இல்லை என்றாலும் பணம் என்பது வரும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் எடுத்து சுக்கிரனின் காரத்துவம் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். சுக்கிரன் கெட்டு போயிருந்தால் அல்லது சுக்கிரன் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி இருந்தாலும் உங்களுக்கு பணம் என்ற ஒரு விசயம் மிகவும் கடினமாக இருக்கும்.

அதிகமான நபர்களுக்கு சுக்கிரன் கண்டிப்பாக கெட்டு இருக்கும். கெட்டு விட்டது நாம் எப்படியும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறோம் அல்லவா. இந்த நினைப்பு இருந்தால் சுக்கிரனை சரி செய்துக்கொள்ளமுடியும்.

நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். சுக்கிரனின் காரத்துவம் உடைய ஒரு சில பரிகாரத்தை செய்தால் போதும். பணம் வருவதற்க்கு என்று நிறைய பரிகார முறையை சொல்லியுள்ளார்கள். அதனை எல்லாம் செய்துக்கொள்ளுங்கள்.

என்னிடம் வந்து பணத்திற்க்கு என்று பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அதற்கு செய்துக்கொடுப்பது உண்டு. அதனை செய்துக்கொண்டு பணத்தை சேர்த்துக்கொள்ளலாம். அனைவருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்று தான் தாராளமாக செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: