வணக்கம்!
நட்சத்திர கோவில்களும் இருக்கின்றன என்று கேள்வி பட்டு இருக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து உங்களுக்கு எந்த கிரகத்தின் பலன் வேண்டும் என்பதை முடிவு எடுத்து அந்த நட்சத்திர கோவில்கள் சென்றும் வழிபட்டுக்கொண்டு பலனை அடையலாம்.
நட்சத்திர பரிகாரம் எங்களின் வழியாக செய்யவேண்டும் என்றால் அதற்கு பணம் கொஞ்சம் அதிகம் செலவாகும் என்று ஏற்கனவே சொல்லிருந்தேன் ஆனால் அதனை எல்லாம் பொறுப்படுத்தாமல் பல நண்பர்கள் இதனை செய்யவேண்டும் என்று தொடர்புக்கொள்கிறார்கள்.
சோதிடம் மட்டும் பார்த்தால் நமக்கு வேலை நடக்காது. ஒரு ஜாதகத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதனை வைத்து எந்தந்த வழிகள் எல்லாம் முயற்சி செய்யவேண்டுமோ அந்த வழி எல்லாம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சரி செய்துகொடுப்பது நமது வழக்கம்.
ஒரு ஜாதகத்தை எடுக்கும்பொழுது அவர்களுக்கு சரியான ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அவர்களின் பாக்கியஸ்தானத்தை சரி செய்யும் வேலையில் இறங்கவேண்டும். அதற்கு தான் பணம் நாங்கள் வாங்குவது. அதனை சரி செய்துவிட்டு அதன் பிறகு ஜாதகத்தில் உள்ள வேலையை செய்வது உண்டு.
நீங்களே வழிபாடு செய்தால் கூட நீங்கள் பாக்கியஸ்தானத்திற்க்கு உள்ள வேலையை செய்துவிட்டு அதன் பிறகு நட்சத்திரத்தை வழிபாடு செய்ய ஆரம்பியுங்கள். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment