வணக்கம்!
சந்திரன் கேது இணைவுப்பற்றி பார்க்கலாம். ஒரு ஜாதகத்திற்க்கு அனைத்து கிரகங்களும் முக்கியம் என்றாலும் சந்திரனின் நிலை கொஞ்சம் அதிகமாகவே கவனிக்கவேண்டிய ஒன்று. நமது ஜாதகமே சந்திரனை வைத்து தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்திரனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அல்லவா. அதனால் தான் அவ்வவ்பொழுது சந்திரனைப்பற்றி எழுதி வருகிறேன்.
சந்திரன் கேதுவோடு இணையும்பொழுது அவர்களின் வாழ்வு அதிகப்பட்சம் துறவறம்போல் தான் இருக்கும். ஞானக்காரன் கேது என்பதால் சொல்லவரவில்லை அவர் பட்ட கஷ்டத்தால் இதனை சொல்லுகிறேன்.
வாழ்க்கையில் நிறைய அனுபவத்தை பெற்ற ஆட்கள் என்று சொல்லுகிறோம் அல்லவா அது எல்லாம் இவர்கள் போன்ற ஆட்களாக தான் இருப்பார்கள். அனுபவம் பட்டால் தான் வரும். நிறைய கஷ்டப்பட்டு இருப்பார்கள் அதனால் வந்து இருக்கும்.
மனக்காரகனோடு கேது இணையும்பொழுது இரண்டு மனம் போல் செயல்படும். பையித்தியம் என்பது ராகுவோடு சந்திரன் சேரும்பொழுது சொல்லுவோம் ஆனால் கேதுவோடு இணையும்பொழுது அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் இருப்பார்கள்.
சந்திரன் அம்மாவை காட்டும் கிரகம் என்பதால் அம்மாவிற்க்கு பிரச்சினையாக இருக்கும். ஒரு சில ஜாதகர்களுக்கு அம்மா இல்லாமலும் இருப்பார்கள். அம்மா இருந்தாலும் அவர்களால் எந்தவித பயனும் இல்லாமல் இருப்பார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment