Followers

Sunday, June 19, 2016

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          குரு பெயர்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறபோகிறது. பொதுவாக கோச்சாரபலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால் ஒரு சில விசங்களை மட்டும் உங்களிடம் சொல்லிவிடவேண்டும்.

தற்பொழுது ஏழரை மற்றும் அஷ்டமனியில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் சின்னதாக ஒரு எச்சரிக்கையை விடுக்கவேண்டும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

முதலில் தனுசு ராசிக்கு ஏழரை நடந்துக்கொண்டு இருக்கின்றது. அவர்களுக்கு தற்பொழுது ஏழரை சனி நடக்காது போல் ஒரு உணர்வு இருக்கும் அதற்கு காரணம் குரு கிரகம் உங்களின் ராசியை ஐந்தாவது பார்வையால் பார்ப்பதால் அப்படி இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆனவுடன் இந்த பார்வை விலகிவிடும் அப்பொழுது உங்களுக்கு அதிகமாக ஒரு கஷ்டத்தை உணரவேண்டும்.

உங்களின் தசா நாதன் நன்றாக இருந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் தசாநாதன் சரியில்லை என்றால் ஏழரை கொஞ்சம் அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உங்களை நான் பயமுறுத்தவில்லை கொஞ்சம் எச்சரிக்கையோடு தற்பொழுது இருந்தே செயல்பட துவங்குங்கள். ஒரு மாதம் மட்டுமே இடையில் உள்ளது.

அஷ்டமசனியாக இருக்கும் மேஷராசியினரும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் உங்களின் ராசிக்கும் குரு பார்வை விலகிவிடுகிறது. அஷ்டமசனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

என்ன பயமுறுத்துக்கிறிர்கள் என்று நினைக்கவேண்டாம். வருவதற்க்கு முன் சொல்லிவிடுவது தான் சோதிடத்தின் தன்மை. சரியாக குரு பெயர்ச்சி அன்று உங்களுக்கு பிரச்சினை ஆரம்பம் ஆகாது அதற்கு முன்கூட்டியே நடக்க ஆரம்பிக்கும் என்பதால் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: